Aran Sei

ஆறுகள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாப்பது மாநில அரசுகளின் அடிப்படைக் கடமை – கேரள உயர்நீதிமன்றம்

றுகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாப்பது மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கேரளாவில் உள்ள மீனச்சல் ஆற்றின் கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் நீரின் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோட்டயத்தில் உள்ள மூன்று நகராட்சிகள் மற்றும் கேரள அரசுக்கு உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிடுகையில் இவ்வாறு கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வு-உச்சநீதிமன்றத்தில் 68,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்

மேலும், உள்ளூர் நிர்வாகம் மற்றும் மாநில அரசு குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென கோட்டயம் மாவட்ட ஆட்சியருக்கு கேரள உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

‘உபா சட்டத்தை அரசு தவறாக பயன்படுத்துவதால் பலர் சிறைகளிலேயே வாழ்வை இழக்கின்றனர்’ – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள்

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் கூறியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்