Aran Sei

‘துர்கா பூஜை பந்தலை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’ – வங்கதேச பிரதமருக்கு செயற்பாட்டாளர்கள் கோரிக்கை

ங்கதேசத்தில் துர்கா பூஜையின்போது கோவில்கள் மற்றும் விழா ஏற்பாடுகளைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினாவிற்கு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள், நாடக கலைஞர்கள், எழுத்தாளர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

60 பேர் கையெழுத்திட்டிருக்கும் கடிதத்தில், “வங்கதேசத்தில், துர்கா பூஜை பந்தலில் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் எதிர்பாராத சம்பவங்களால், இந்துக்களின் மிகப்பெரிய பண்டியகையான துர்கா பூஜையை சுமுகமாக கொண்டாட முடியாமல், வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் வருத்தத்தில் உள்ளனர்” என தெரிவித்துள்ளனர்.

”வங்கதேச அரசு மற்றும் காவல்துறையினரின் சரியான நடவடிக்கையால், நிச்சயமாக ஒரு பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால், 71 ஆம் ஆண்டின் விடுதலைப் போரினால் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்ட பங்கோபாந்துவின் வகுப்புவாதமற்ற சிந்தனையை எதிர்க்கும் சக்திகளின் இந்த முயற்சி, மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட மக்களைத் தொந்தரவு செய்துள்ளது.” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”சிறுபான்மையினர் அவர்கள் மத பழக்கவழக்கங்களை கடைபிடித்தல், உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்தல் ஆகிய பொறுப்பு பெரும்பான்மையினருக்கு உள்ளது. ஆனால் இந்தியா, வங்கதேசம் என இரண்டு நாடுகளிலும் தவறு நடந்துள்ளது” என கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

கல்வியாளர்கள் பபித்ரா சர்க்கார், சிபிஐ(எம்) பொலிட்பீரோ உறுப்பினர் எம்.டி.சலீம், கொல்கத்தா முன்னாள் மேயர் பிகாஷ் பட்டாச்சார்யா, நாடக பிரபலம் தேப் சங்கர் ஹால்டர், எழுத்தாளர் நபகுமார் பாசு, நாடக பிரபலம் கௌசிக் சென், திரைப்பட தயாரிப்பாளர் கமலேஸ்வர் முகோபாத்யாய், நடிகர்கள் பரம்பிரதா சாட்டர்ஜி, ரித்தி சென், ரித்விக் சக்ரோபோர்டி உள்ளிட்ட பலர் கையெழுத்திட்டுள்ளனர்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்