Aran Sei

மூடநம்பிக்கையால் நடந்த விபரீதம்: பெற்ற மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர்கள்

அற்புதங்கள் நிகழ்த்துவதற்காக பெற்ற மகள்களை நரபலி கொடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரைச் சேர்ந்த புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும், அவரது மனைவி பத்மஜா ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் பேராசிரியராகவும் பணியாற்றி வருவதாக சன்நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களின் மூத்த மகள் அலேக்யா (27) மேனேஜ்மென்ட் ஆஃப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படித்து வந்தார். சாயி திவ்யா (22) ஏ ஆர் ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது.

“புரட்சியின் கப்பல் போட்டம்கின்” – 95 ஆண்டுகள் கடந்தும், சிறந்த படங்களின் பட்டியலில் நீடிக்க காரணம் என்ன?

கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக வீட்டிலேயே பெற்றோருடன் தங்கி வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வீட்டில் பூஜைகள் செய்து அற்புதங்கள் நடத்துவதாக கூறி பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு வீட்டில் பூஜைகள் செய்தபடி முதலில் சாய் திவ்யாவையும் பின்னர் அலெக்கியாவும் உடற்பயிற்சி செய்யும் டம்பல்ஸ் மூலம் அடித்து கொலை செய்து பூஜைகள் செய்துள்ளனர். வீட்டிலிருந்து வந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் கல்லூரி ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த  துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவி மனோகராச்சாரி காவலர்களுடன் நிகழ்விடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் “புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரும் படித்து நல்ல வேலையில் பணிபுரிந்து வரக்கூடிய நிலையில் மகள்களையும் படிக்க வைத்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் பக்தியின் மூலம் ஏதோ அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்ற எண்ணத்தில் தங்களது இரு மகள்களையும் பூஜை அறையில் நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

பீமா கோரேகான் செயல்பாட்டாளர்களை விடுதலை செய்யுங்கள் – இந்தியாவிடம் ஐ.நா வலியுறுத்தல்

தங்கள் மகள் மீண்டும் எழுந்து வருவார்கள் ஒரு இரவு பொறுத்து இருங்கள் என்று அவர்கள் தெரிவித்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரமாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும்,. புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரிடமும் தொடர்ந்து என்ன நடந்தது என்பது குறித்து உண்மை நிலவரத்தை கண்டறிய தொடர்ந்து அவர்களுடன் பேச்சு கொடுத்து வருகிறோம் என துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவி மனோகராச்சாரி தெரிவித்துள்ளார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்