Aran Sei

காவல்துறை சோதனையில் கைப்பற்றப்படும் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் கல்வியாளர்கள் மனு

த்திய, மாநில அரசின் புலனாய்வு துறை விசாரணையின்போது கைப்பற்றப்படும் மின்னணு ஆவணங்களை முறையாகப் பராமரிக்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை வைத்து  உச்சநீதிமன்றத்தில் கல்வியாளர் குழுவொன்றால்  மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கம்யூனிச அமைப்புகளுடன் மாவோயிஸ்டுகள் பற்றிய ஆவணங்களை டெல்டும்ப்டே பகிர்ந்தார்: தேசிய புலனாய்வு முகமை குற்றச்சாட்டு

ஜவகர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான ராம் ராமசாமி, புனேவில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழக பேராசிரியர் சுஜாதா படேல்; ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் பல்கலைக்கழக பேராசிரியர் மாதவ பிரசாத் உட்பட எண்ணற்ற பேராசிரியர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீப காலங்களில் விசாரணை அதிகாரிகள் மின்னணு பொருட்களைப் பறிமுதல் செய்த சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்ட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி போராடும் விவசாயிகளை தாக்கிய ‘உள்ளூர்’ நபர்கள் – உண்மை முகங்களை காட்டும் ஊடக புலனாய்வு

மேலும், புலனாய்வு துறையின் சோதனையின்போது கைப்பற்றப்படும் மின்னணு பொருட்களை முறையாகப் புலனாய்வு துறை கையாளாததால், சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் மறுமுறை பயன்படுத்த முடியாத அளவில் உள்ளதாகவும் அல்லது தகவல்கள் அழிக்கப்பட்டு விடுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி கூறுகிறது.

பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர் கைது – தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை

அதுமட்டுமல்லாது கைப்பற்றப்படும் ஆவணங்களின் நகல் உரியவரிடம் அளிக்கப்பட வேண்டும் எனவும், இது குறித்து நீதிமன்றம் புலனாய்வுத்துறைக்கு வழிகாட்டுதல் வழங்க வேண்டும் எனவும் மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்