Aran Sei

இந்தியாவில் இனப்படுகொலைக்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன – சர்வதேச மாநாட்டில் சிவில் சமூக தலைவர்கள் கருத்து

Credit : The Wire

ந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என சர்வதேச அமைப்புகளின் வல்லுநர்கள், சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெறுப்பு பேச்சு மற்றும் இனப்படுகொலை தொடர்பாக பிப்ரவரி 26 முதல் 28 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற சர்வதேச உச்சிமாநாட்டில் கலந்து கொண்டபோது அவர்கள் இதனை தெரிவித்தனர்.

இனப்படுகொலை என்பது ஒரே நாளில் நடைபெறும் நிகழ்வல்ல; அது ஒரு செயல்முறை என தெரிவித்துள்ள அவர்கள், இந்தியாவில் இனப்படுகொலையை தடுப்பதற்கான செயல்முறை விளிம்பு நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ரூவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் முன்னாள் வழக்கறிஞர் கிரெக் கார்டன், “சமீபத்தில் இந்தியாவில் (இனப்படுகொலைக்கு) நேரடி அழைப்புகள் வந்தன.  நிபந்தனை அழைப்புகள், அவர்கள் இதைச் செய்தால், நாங்கள் இதைச் செய்வோம் போன்ற தூண்டுதல்களும்” என தெரிவித்துள்ளார்.

கம்போடியாவில் உள்ள இனப்படுகொலைக்கான ஆவண மையத்தின் ஆராய்ச்சியாளர் மவுங் ஜர்னி, “இந்தியாவில் இனப்படுகொலையை தடுக்கும் செயல்பாடு விளிம்பில் இருப்பது மட்டுமல்ல, ஏற்கனவே வெளிப்படையான ஒரு இனப்படுகொலை செயல்பாட்டில் உள்ளது என்று நான் நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

”கொலையாளிகள் பாதிக்கக்கூடிய மக்களை தங்கள் மதத்திற்கான அச்சுறுத்தலாக சித்தரிக்கின்றனர். இத மனிதாபிமானமற்ற தன்மை, தொடங்கும்போது நாட்டில் கொலை நடைபெறாவிட்டாலும், இனப்படுகொலைக்கான செயல்முறை ஆழமாக உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் தற்போது நடப்பதை ஹிட்லரின் நாஜி ஜெர்மனியுடன் ஒப்பிட்ட யேல் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியரும் ’பாசிசம் எவ்வாறு செயல்படுகிறது’ என்ற நூலின் ஆசிரியருமான ஜேசன் ஸ்டான்லி, ”ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஆரம்பகால சிந்தனையாளர்கள் நாஜியின் மாதிரியை இந்தியாவில் பின்பற்ற வேண்டும் என்று வெளிப்படையான ஆலோசனை தெரிவித்தனர். நூரெம்பர்க் சட்டத்தைப் போல ஒரு அச்சுறுத்தும் வகையில் சிஏஏ சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இது செயல்படுத்தப்படுகிறது. அதற்கான வரைபடம் தெளிவாக உள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்