பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டுதலின் பேரில் பிரதமர் மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை வாழ்த்தி மாணவர்கள் முழக்கமிட்ட விவகாரத்தை விசாரிக்க மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியான காணொளி வைரலானது.
நேற்று முன்தினம் (ஜனவரி 26), உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டம் சோராத்கரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இக்காணொளி எடுக்கப்பட்டுள்ளது.
அக்காணொளியில், தேசிய கீதம் பாடி முடித்த மாணவர்கள், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பேரில், பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் பெயரிலும், சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயரிலும் முழக்கங்களை எழுப்புகின்றனர்.
ஒரு துறவி முதலமைச்சராக இருக்க முடியாது – யோகி ஆதித்யநாத் குறித்து சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த்
இச்செயலானது, தற்போது உத்தரப் பிரதேசத்தில் அமலில் உள்ள தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது.
இது குறித்து, சித்தார்த்நகர் மாவட்ட நீதிபதி தீபக் மீனா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இக்காணொளி சமூக வலைதளங்களின் வழியாக என் பார்வைக்கு வந்தது. இச்சம்பவத்தை எங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளோம். இதை விசாரிக்க பிஎஸ்ஏ-க்கு (பேசிக் சிக்ஷா அதிகாரி) உத்தரவிட்டுள்ளோம். யார் குற்றவாளியாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.