Aran Sei

தனிநபர் தகவல்கள் கசிந்தால் விசாரணை அதிகாரிகள் மீது நடவடிக்கை – கர்நாடகா உயர்நீதிமன்றம்

ழக்கு விசாரணையின்போது சேகரிப்படும் தனிநபர் தகவல்கள், மூன்றாம் தரப்பினருக்கு பகிரப்பட்டால், விசாரணை அதிகாரிகள்மீது கடமையைத் தவறியதாக  நடவடிக்கை மேற்கொள்ளலாம்  என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

எந்தவொரு தனிநபரின் தனியுரிமையை தடைசெய்யுக்கூடிய விதமாக, அவர்களது ஸ்மார்ட்போன்கள், கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் சேமிப்பு கருவிகள், மின்னஞ்சல்கள் போன்ற மின்னணு உபகரணங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பது விசாரணை அதிகாரிகளின் பொறுப்பு என நீதிமன்றம் அறிவித்திருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்துவை திருமணம் செய்த இஸ்லாமியப் பெண்: இந்துவாக மதம் மாறாதவரை திருமணம் செல்லாது – நீதிமன்றம் தீர்ப்பு

”தனிநபர் தகவல்களைப் பகிரங்கமாகவோ அல்லது வேறு விதமாகவோ வெளிப்படுத்துவது, வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் உத்தரவால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி மூன்றாம் தரப்பினருக்கு அந்தத் தரவுகளை விசாரணை அதிகாரியால் வழங்க முடியாது” எனக் கூறியிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் மார்ச் 12 ஆம் தேதி, 2018 ஆண்டில் போதைப் பொருள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வீரேந்திர கண்ணாவை பாலிகிராஃப் சோதனைக்கு உட்படுத்தி, அவரது மின்னணு உபகரணங்கள்  மற்றும் மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை கைப்பற்ற காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார் என தி இந்து தெரிவித்துள்ளது.

இரண்டு கட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்ட மருத்துவருக்கு கொரோனா – தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை

மீட்டெடுக்கப்பட்ட தரவுகள் விசாரணைக்குத் தேவைப்படலாம் அல்லது தேவைப்படாத தனிப்பட்ட தகவல்கள் இருக்கலாம். மேலும், தனியுரிமையைப் பாதுகாக்க விசாரணை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என நீதிபதி கூறியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சொற்களை குற்றம்சாட்டப்பட்டவர் தர மறுத்தால், அதை ஹேக் செய்யும் ஒரு சிறப்பு நிறுவனத்தை நாடுவதற்கு விசாரணை அமைப்புகளுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது என நீதிமன்றம் கூறியிருப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகங்களின் டிஆர்பி வெறியால் குற்றவாளியாக்கப்பட்டேன் – சூழலியல் ஆர்வலர் தீஷா ரவி குற்றச்சாட்டு

நியமிக்கப்பட்ட அதிகாரியைத் தவிர மற்றவர்கள் அந்தத் தகவல்களை அனுகாத வகையில் கடவுச்சொற்களை மாற்றுவதற்கான சுதந்திரம் விசாரணை அமைப்புகளுக்கு இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தி இந்து கூறியுள்ளது.

மின்னனு சாதன உற்பத்தியாளர்கள் அல்லது மின்னஞ்சல் சேவை வழங்குபவர்கள் கணக்குகளைத் திறக்க வசதி செய்யாதபோது, விசாரணை நிறுவனம் தாக்கல் விண்ணப்பத்தின் பெயரில், அவற்றை ஹேக் செய்ய அனுமதி அளிக்கப்படும் என நீதிமன்றம் கூறியிருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்