Aran Sei

சமூக செயல்பாட்டாளர் அகில் கோகோய் மீது சிஏஏவுக்கு எதிராக போராடியதாக வழக்கு – வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது குற்றம்சாட்டப்பட்ட சமூக செயல்பாட்டாளர் அகில் கோகோய் மீதான 2 வழக்குகளில் ஒன்றிலிருந்து அவரை நீக்கி  கவுகாத்தி தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து எண்ணற்ற வழக்குகளில் சிறை சென்று வருகிறார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

‘ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத காஷ்மீர்’ – டேவிட் தேவதாஸ்

தற்போது நடந்து முடிந்த அசாம் மாநில சட்டமன்ற தேர்தலில் சிப்சகார் சட்டமன்ற தொகுதியில் அகில் கோகோய் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சாபூவா காவல்நிலையத்தில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது பதியப்பட்டிருந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக என்.ஐ.ஏ நீதிமன்றம் அறிவித்துள்ளதாக என்.டி.டி.வி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பதாகை வைக்க அறிவுறுத்திய யுஜிசி – கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் கல்வியாளர்கள், மாணவர்கள்

எனினும், அவர்மீது என்.ஐ.ஏ பதிந்துள்ள மற்றொரு வழக்கில் நீதிமன்றக் காவலில் இருக்க நேரிடும் என்றும் அந்த செய்தி கூறுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் பொது 61 அமைப்புகளை திரட்டி போராடினர் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்