Aran Sei

” விசாரணை சச்சின், லதா மங்கேஸ்கர் மீது அல்ல – அழுத்தம் கொடுத்த பாஜக மீது ” – மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர்

விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக பிரபலங்கள் ஒரே ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்தது தொடர்பாக, பாஜக தகவல் தொழில்நுட்ப அணிமீதுதான் விசாரணை நடத்தப்படும் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக பதிவிட்ட பிரபலங்களுக்கு, அழுத்தம் கொடுத்தது தொடர்பாக, விசாரணை மேற்கொள்ளப்படும் எனக் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி அனில் தேஷ்முக் தெரிவித்திருந்தார். “ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான பதிவுகளை பிரபலங்கள் பதிவிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது ஏன் நிகழ்ந்தது என்பது குறித்து விசாரிக்கப்படும்” என மகாராஷ்டிரா சட்டபேரவையில் அவர் தெரிவித்துள்ளார்.

கலவரத்துக்கு ஒரு ஆண்டுக்குப் பிறகும் தொடரும் பலி வேட்டை : டெல்லி காவல்துறைக்கு கண்டனம்

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா, சூழலியல் செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் உள்ளிட்டவர்கள் ட்வீட் செய்ததை அடுத்து போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், போராட்டம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை, இதில் பிறர் கருத்து தெரிவிக்க உரிமை இல்லை என அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனை அடுத்து சச்சின், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பிரபலங்கள் ஒரே ஹேஷ்டேகுடன் பதிவிட்டு மத்திய அரசின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு : மாற்றி மாற்றி பழிப்போடும் தமிழக, கேரள மாநில அரசுகள்

ஒரே நேரத்தில், ஒரே ஹேஷ்டேக் பயன்படுத்து பதிவிட்டது தொடர்பாக பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பேசிய, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், பிரபலங்களை ஒரே நேரத்தில் ஒரே பதிவை ட்விட்டரில் பதிவிட அழுத்தம் கொடுத்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அம்மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டனர், இந்தியா ஒற்றுமையாக இருப்பது அதைத் தெரிவிப்பது குற்றமா? எனக் கேள்வி எழுப்பியதோடு, இது போன்ற புகார்களை அரசாங்கம் ஊக்குவிக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.

கண்காணிப்பு பட்டியலில் வரியிலா சொர்க்கம் கேமன் தீவுகள் – இந்தியாவுக்குள் வரும் அன்னிய முதலீடுகள் பாதிக்கப்படுமா?

இதற்கு பதிலளித்த அனில் தேஷ்முக், “நான் சச்சின் மற்றும் மங்கேஷ்கர் பதிவுகுறித்து பேசவில்லை. பதிவிடும்படி அவர்களுக்கு அழுத்தம் கொடுத்த அரசியல் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி குறித்தே விசாரணை மேற்கொள்ளப்படும் எனக் கூறினேன். இந்த சம்பவத்தில் பாஜக ஐடி பிரிவை சேர்ந்த 12 பேருக்குத் தொடர்பிருப்பதாக தெரிய வந்திருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்