Aran Sei

‘ஆக்சிஜனுக்கே போராடுகையில் கொரோனா மருந்துக்கு ஜிஎஸ்டி விதிப்பது மனிதத்தன்மையற்ற செயல்’ – பிரியங்கா காந்தி கண்டனம்

Image Credits: DNA India

கொரோனா தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் அனைத்து உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் உபகரணங்கள்மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை நீக்க வலியுறுத்தியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இந்த பெருந்தொற்று சூழலிலும் இவற்றுக்கு வரி வசூலிப்பது கொடியதும் மனித உணர்வற்ற செயலுமாகும் என்று இந்திய ஒன்றிய அரசை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (மே 28), தனது டிவிட்டர் பக்கத்தில், இப்பெருந்தொற்று காலத்தில் ஆம்புலன்ஸ், படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன், மருந்துகள், தடுப்பு மருந்துகள் ஆகியவற்றை போராடிக்கொண்டிருப்பவர்களிடம், கொரோனா தொற்று மருந்துகளுக்கும் சிகிச்சை உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பது கொடிய செயல் மட்டுமல்ல மனித உணர்வற்ற செயல் என்று பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘கொரோனா மருந்துகளுக்கான வரியை நீக்க வேண்டும்’ – பாஜக ஆளாத ஏழு மாநில அரசுகள் கூட்டாக வலியுறுத்தல்

மேலும்,  இன்று (மே 28), ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் உபகரணங்கள்மீதான ஜிஎஸ்டியை நீக்குவதாக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் அதற்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியையும் குறிப்பிடும் பட்டியலை இணைத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்