Aran Sei

’விவசாயிகளின் துயரை தனதாக கருதாத தலைவரால் நாட்டிற்கு எப்பயனும் இல்லை’ – பிரியங்கா காந்தி

விவசாயிகளின் துயரங்களைக் கேட்டு, அவற்றைத் தன்னுடைய துயரங்களாகக் கருதாத ஒரு தலைவரால் நாட்டிற்கு எந்தப் பயனுமில்லை என்று உத்திரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தில் விவசாயிகள் சார்பில், டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது.

‘வெறுப்பின் உருவம்’ – ஆர்எஸ்எஸ் மீதான தடையும், சர்தார் வல்லபாய் பட்டேலும்

அப்போது, மத்திய டெல்லியின் மிண்டோ சாலையில் ஒரு டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் விவசாயி நர்வீத் சிங் உயிரிழந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் உத்தரபிரதேசத்தில் உள்ள அவரது சொந்த ஊரான ராம்பூருக்கு கொண்டுசெல்லப்பட்டது.

டிராக்டர் பேரணி Vs ரத யாத்திரை: விவசாயிகளை விமர்சிக்க பாஜகவுக்கு உரிமை உள்ளதா?

இந்நிலையில், இன்று (பிப்பிரவரி 4) உத்தரபிரதேச பாஜக மாநில தலைவர் பிரியங்கா காந்தி வதோரா, ராம்பூரில் உள்ள நர்வீத் சிங் இல்லத்திற்கு சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள பிரியங்கா காந்தி, “முழு நாடும் விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்கிறது. விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை, போராட்டம் தொடரும். தன்னுடைய துயரங்கள் அரசு கேட்கும் என்று ஒரு விவசாயியுடைய மகன் ராம்பூர் கிராமத்திலிருந்து டெல்லிக்குச் சென்றுருக்கிறார். அவர்கள் ஒற்றுமையாக இருந்தால், அரசைக் கேட்க வைக்க முடியும். விவசாயிகளின் மனதில் இருக்கும் குறைகளைக் கேட்க அரசு தன் கதவுகளைத் திறக்கும். ஆனால் அது இங்கு நடக்கவில்லை.” என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

செங்கோட்டை டிராக்டர் பேரணி வன்முறை: விவசாயிகள் தலைவர்கள் மீது வழக்கு

“விவசாய சட்டங்களை ரத்து செய்யாததன் வழியாக, அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைத்து வருகிறது. அதைக் காட்டிலும் பெரிய அநீதி, தியாகிகளை (போராட்டங்களின்போது இறந்தவர்களை) தீவிரவாதிகள் என்று அவர்கள் முத்திரைக் குத்துவதும் விவசாயிகளின் போராட்டத்தை அரசிற்கு எதிரான அரசியல் சதி என்று அழைப்பதும்தான்.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

இந்த இடத்தில் பிரதமரின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய பிரியங்கா காந்தி, “ஏழைகள் மற்றும் விவசாயிகளின் துயரங்களைக் கேட்டு, அவற்றைத் தன்னுடைய துயரங்களாகக் கருதாத ஒரு தலைவரால் நாட்டிற்கு எந்தப் பயனுமில்லை.” என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்