Aran Sei

தேர்தலில் பணியாற்ற ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார்: 700க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்ததாக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

த்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தலில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு கர்ப்பிணி பெண் உட்பட 700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும்  அதிகாரப்பூர்வமாக  வெளியிடப்படும் போலி புள்ளிவிவரங்களை விட, உத்தரபிரதேசத்தில் மக்கள் அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (மே 1), தனது ட்விட்டர் பக்கத்தில், “உத்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தலில் பணியாற்றக் கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு கர்ப்பிணி பெண் உட்பட 700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலையின் பேரழிவு தாக்குதலைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், உத்தரபிரதேசத்தில் கிட்டத்தட்ட 60,000 கிராம சபைகளில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. பரப்புரைகள் தொடர்ந்தன. அதனால், உத்தர பிரதேச கிராமங்களில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது.” என்று பிரியங்கா காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் டுவிட்டரில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்ட வாலிபர் – குற்றவியல் வழக்கு பதிவு செய்த காவல்துறை

“அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் போலி புள்ளிவிவரங்களை விட, மக்கள் அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தின் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மரணங்கள் கொரோனா மரணங்களாக கணக்கிடப்படுவதில்லை. காரணம் அம்மக்களுக்கு கொரோனா தொற்றுச் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “இந்த உண்மையை மூடிமறைக்கும் வேலையில்தான் உத்தரபிரதேச அரசு ஈடுபட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களையும் உயிர்களைக் காப்பாற்ற அயராது உழைத்துக்கொண்டிருக்கும் மருத்துவ பணியாளர்களையும் அச்சுறுத்துகின்றன. உத்தர பிரதேசத்தில் நடப்பது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்றால் மிகையல்ல. இதற்கு, உத்தரபிரதேச தேர்தல் ஆணையமும் துணை நிற்கிறது.” என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்