Aran Sei

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என விளம்பரம் செய்யும் ஒன்றிய அரசு; ஆனால் நடப்பு வேறு – பிரியங்கா காந்தி விமர்சனம்

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு மாறாக, அவர்கள் தங்களின் விளைப்பயிருக்கான செலவுகளைக் கூட திரும்பப் பெறமுடியாத நிலைக்கு பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு அவர்களைத் தள்ளியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, தனது டிவீட்டுடன் உருளைக்கிழங்கின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், உத்தரபிரதேசத்தில் உள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளதாக கூறும் செய்தி அறிக்கை ஒன்றை இணைத்துள்ளார்.

அத்துடன், “மற்ற விவசாயிகளைப் போலவே, உத்தரபிரதேசத்தின் உருளைக்கிழங்கு விவசாயிகளும் கவலையில் உள்ளனர். அவர்கள் தங்களின் கடின உழைப்பிற்கான விளைப்பொருட்களை வேர்க்கடலைக்கு விற்க வேண்டியதாக இருக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

“பொதுக்கூட்டங்களிலும் விளம்பர பலகைகளிலும் ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்’ என்று பொய்யான பரப்புரைகளை பாஜக அரசு வெளியிடுகிறது. ஆனால், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு மாறாக, அவர்கள் தங்களின் விளைப்பயிருக்கான செலவுகளைக் கூட திரும்பப் பெறமுடியாத நிலைக்கு அவர்களை தள்ளியுள்ளது.” என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்