Aran Sei

பழங்குடிகளை கொன்ற பசுகாவலர்கள்: ‘பழங்குடியினர் மீதான வன்முறை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ்’ – பிரியங்கா காந்தி

லித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பிரச்சாரம்தான் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கிறது என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகப்பட்டு இரு பழங்குடியினரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. இச்சம்பவத்தில் 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தொண்டர்கள் இருப்பதாக  காங்கிரஸ்  கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

மத்திய பிரதேசம்: மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி 2 பழங்குடிகளைக் கொன்ற பசுக் காவலர்கள் – 9 பேர் கைது

“15 முதல் 20 பேர் கொண்ட குழு பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்குச் சென்று, பழங்குடியினர் மாட்டுக்கறி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பழங்குடிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில், ஷேர் சிங் ரத்தோர் (28), அஜய் சாஹு (27), வேதாந்த் சௌஹான் (18), தீபக் அவதியா (38), பசந்த் ரகுவன்ஷி (32), ரகுநந்தன் ரகுவன்ஷி (20) உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியது.

இந்நிலையில், இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, “பஜ்ரங் தளம் (ஆர்எஸ்எஸ்) உறுப்பினர்கள் சியோனியில் (மத்தியப் பிரதேசத்தில்) இரண்டு பழங்குடியினரைக் கொன்றுள்ளனர். தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பிரச்சாரம்தான் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாம் அனைவரும் ஒன்றுக்கூடி இந்த வெறுப்பு பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் என்று பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார்.

Source: NDTV

தோத்துப்போன பாஜக அலறும் கங்கை அமரன்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்