பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக ஒன்றிய அரசை விமர்சித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மக்களுக்கு சிரமம் கொடுப்பதில் மோடி அரசு சாதனை படைத்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று(அக்டோபர் 24) தனது டிவிட்டர் பக்கத்தில், இந்த ஆண்டு பெட்ரோல் விலை 23.53 ரூபாயால் அதிகரித்துள்ளதாக கூறும் செய்திக்குறிப்பு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.
मोदी जी की सरकार ने जनता को कष्ट देने के मामले में बड़े-बड़े रिकॉर्ड बनाए हैं
सबसे ज्यादा बेरोजगारी: मोदी सरकार में
सरकारी संपत्तियां बिक रहीं: मोदी सरकार में
पेट्रोल के रेट एक साल में सबसे ज्यादा बढ़े: मोदी सरकार में pic.twitter.com/pL2369ujn2
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 24, 2021
அத்துடன், “பொதுமக்களுக்குப் பிரச்சனைகளை கொடுப்பதில் மோடிஜியின் அரசானது பெரும் சாதனைகளை படைத்துள்ளது. அதிக வேலையின்மை: மோடி அரசாங்கத்தில், அரசு சொத்துக்கள் விற்கப்படுவது: மோடி அரசாங்கத்தில், ஓர் ஆண்டில் பெட்ரோல் விலை உட்சம் தொட்டது” என்று பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலாவும் அதே செய்திக்குறிப்பை பகிர்ந்து, அச்சே தின் (நல்ல நாட்கள்) என்று ட்வீட் செய்துள்ளார்.
நேற்று(அக்டோபர் 23), பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து நான்காவது நாளாக லிட்டருக்கு 35 பைசா உயர்ந்தது.
டெல்லியில் பெட்ரோல் இப்போது ஒரு லிட்டருக்கு ரூ.107.24-க்கும் மற்றும் டீசல் ரூ.95.97-க்கும் விற்பணை செய்யப்பட்டு வருகிறது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.