Aran Sei

விவசாயிகளின் போராட்டம் ஓராண்டு நிறைவு: ‘700 விவசாயிகளின் உயிர் தியாகம் எப்போதும் நினைவுக்கூறப்படும்’- பிரியங்கா காந்தி

விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில், விவசாயிகளின் அசைக்க முடியாத சத்யாகிரகம், 700 விவசாயிகளின் உயிர் தியாகம் மற்றும் இரக்கமற்ற பாஜக அரசின் ஆணவம் போன்றவற்றுக்காக இந்தப் போராட்டம் நினைவுகூறப்படும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கி, டெல்லியின் பல்வேறு எல்லைகளில், மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போராட்டம் இன்று ஓர் ஆண்டை நிறைவுச் செய்துள்ளது.

இதுதொடர்பாக, இன்று(நவம்பர் 26), பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “விவசாயிகள் போராட்டம் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. விவசாயிகளின் அசைக்க முடியாத சத்தியாகிரகம், 700 விவசாயிகளின் உயிர் தியாகம், இரக்கமற்ற பாஜக அரசின் ஆணவம் மற்றும் அன்னதாதாக்கள்(உணவளிப்பவர்கள்) மீதான தாக்குதல்கள் ஆகியவற்றுக்காக இப்போராட்டம் அறியப்படும்” என்று கூறியுள்ளார்.

“ஆனால், இந்தியாவில் விவசாயிகள் போற்றப்படுகிறார்கள். எப்போதும் போற்றப்படுவார்கள். விவசாயிகளின் போராட்டத்தின் வெற்றியே இதற்கு சான்றாகும். ஜெய் கிசான்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 19 ஆம் தேதி, மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, மூன்று விவசாய சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார்.

அச்சட்டங்களை நாடாளுமன்றத்தில் முறையாக ரத்து செய்யும் வரை விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் போராட்டத்தைத் தொடர்வார்கள் என்று விவசாயிகள் தலைவர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்