மூன்று விவசாய சட்டங்களானது பாஜகவின் கோடீஸ்வர நண்பர்களுக்குப் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டவை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இமாச்சல் பிரதேச மாநிலத்தில் ஆப்பிள் கொள்முதல் விலையை அதானி நிறுவனம் ரூ.16-ஆக குறைத்தது குறித்தான அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள பிரியங்கா காந்தி, இது சந்தைகளில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும் விவசாய விளைபொருட்களுக்க்கான விலையை நிர்ணயிக்கும் உரிமை ஆளும் கட்சியின் கோடீஸ்வர நண்பர்களுக்கு வழங்கப்பட்டால் இது நடந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, இன்று (ஆகஸ்ட் 28), தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “விவசாயிகள் ஏன் மூன்று விவசாய விரோத விவசாய சட்டங்களை எதிர்க்கிறார்கள்? ஏனென்றால், விவசாயிகளின் கடின உழைப்பால் விளைந்த பயிர்களுக்கு விலையைத் தீர்மானிக்கும் உரிமை, இச்சட்டங்களின் வழியாக பாஜகவின் கோடீஸ்வர நண்பர்களுக்கு வழங்கப்படுவதால்தான், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.” என்று கூறியுள்ளார்.
किसान काले कृषि कानूनों का विरोध क्यों कर रहे हैं?
👉क्योंकि अगर किसानों की मेहनत से उगाई गई फसल के दाम व अन्य चीजें तय करने का अधिकार भाजपा के अरबपति मित्रों को दे दिया गया तो यही हाल होगा।👇
काले कृषि कानून भाजपा के अरबपति मित्रों के फायदे के लिए हैं। pic.twitter.com/UJsoPisFPW
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 28, 2021
விவசாய சட்டங்கள் பாஜகவின் கோடீஸ்வர நண்பர்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
ஒன்பது மாதங்களை நெருங்கிக்கொண்டிருக்கும், மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து வருவதோடு, அவற்றை திரும்பப் பெறக் கோரி வருகிறது.
தொடர்புடைய பதிவுகள்:
விவசாயிகள் போராட்டம்: செப்டம்பர் 25 நாடுதழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு
வேளாண் சட்டங்களை நீக்கக் கோரும் விவசாயிகளின் போராட்டம் சட்ட விரோதமானது – உத்தரபிரதேச அரசு
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.