Aran Sei

‘பொய்கள், பொய்கள், எண்ணிலடங்கா பொய்களை சொல்லும் உ.பி. அரசு’ – பிரியங்கா காந்தி விமர்சனம்

வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்குதல் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பலவற்றில், உத்தரபிரதேச பாஜக அரசு தோல்வியடைந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாதேரா குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், உத்தரபிரதேச அரசு தனது நான்கரை வருட ஆட்சிமீது எழுந்துள்ள மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்திருக்க வேண்டும் என்றும் ஆனால் அது தொடர்ந்து பொய்கள், பொய்கள் மற்றும் எண்ணிலடங்கா பொய்களைதான் பரப்புகிறது என்று அவர் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (செப்டம்பர் 19), பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தொடர்ச்சியான டிவீட்டுகளில், “கரும்பு, கோதுமை, நெல், உருளைக்கிழங்கு ஆகியவற்றுக்கான நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்குவதிலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும், மின்சார விலையைக் குறைப்பதிலும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் உத்தரபிரதேச அரசு தோற்றுவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பாஜக அரசு உத்தரபிரதேசத்தை என்ன செய்தது? ஊட்டச்சத்து குறைபாட்டில் முதலிடம், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம், கடத்தல்களில் முதலிடம், கொலை வழக்குகளில் முதலிடம், தலித்துகளுக்கு எதிரான கொடுமைகளில் முதலிடம்.” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாதேரா விமர்சித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்