Aran Sei

சமையல் எரிவாயு விலை – ‘3 மாதத்தில் 200 ரூபாய் உயர்வு; பணவீக்கத்தில் தள்ளப்படும் சாமானியர்கள்’ – பிரியங்கா காந்தி

டந்த 3 மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் சாமானிய மக்களை பணவீக்கத்தில் தள்ளுகிறது என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் ஒரு லிட்டர், 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டிலேயே முதன்முறையாக ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. அதை தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலம், அணுப்பூரில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. டீசல் விலையும் கணிசமான உயர்ந்துள்ளது.

எரிபொருள் விலையுயர்வு: ‘சாமானியர்களின் பாக்கெட்டை காலி செய்து, நண்பர்களின் பாக்கெட்டை நிரப்பும் மோடி அரசு’ – ராகுல் காந்தி

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், அதன் மீது சுமத்தப்பட்டுள்ள வரியைக் குறைக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி, நாடு முழுதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழகத்திலும், பிப்பிரவரி 22 ஆம் தேதி, திமுக சார்பில் விலையுயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

மேலும், இந்த மாதத்தில் மட்டும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் 3-வது முறையாக இன்று (பிப்பிரவரி 25) சிலிண்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் அதிகரித்துள்ளது.

உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை – காரணம் என்ன?

இந்நிலையில், பிரியங்கா காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில்,  “கடந்த 3 மாதத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை ஏற்கெனவே 100 ரூபாயை எட்டிவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மோடி அரசின் செயல்பாடுகள் பொருளாதாரத்தில் கோடீஸ்வரர்களுக்கு ஆதரவாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், சாமானிய மக்களை பணவீக்கத்திலும், விலைவாசி உயர்விலும் தள்ளுகிறது.” என்று பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்