Aran Sei

‘பற்றாக்குறையால் பூட்டப்பட்டுள்ள தடுப்பு மருந்து மையங்கள் குறிக்கோளற்ற தடுப்பு மருந்து கொள்கைக்கு சான்று’ – பிரியங்கா காந்தி விமர்சனம்

கொரோனா தடுப்பு மருந்து மையங்களுக்குப் பூட்டு போடப்பட்டுள்ளது, தடுப்பு மருந்துகளுக்காக மாநிலங்கள் வேண்டி நிற்பது, தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆகியவை ஒன்றிய அரசின் குறிக்கோளற்ற தடுப்பு மருந்து கொள்கைக்குச் சான்றுகளாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, நேற்று (மே 27), பிரியங்கா காந்தி தனது முகநூல் பக்கத்தில், “கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு தடுப்பு மருந்துகள் மிகவும் பயனுள்ள ஆயுதம் என்பதை உலக நாடுகள் கடந்த ஆண்டிலேயே அறிந்து கொண்டன. அப்போதே, பெரிய நாடுகள் தங்கள் மக்கள் தொகையைவிட பல மடங்கு எண்ணிக்கையில், தடுப்பு மருந்துகளுக்கு ஆர்டர் கொடுத்து விட்டன.” என்று நினைவூட்டியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தாமதம்: பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் – உக்ரெய்ன் நாடாளுமன்றம் அதிரடி

“நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பு மருந்துகளைச் செலுத்துவதற்கான முழுமையான திட்டம் ஒன்றிய அரசிற்கு இருப்பதாக, கடந்த ஆண்டு  ஆகஸ்டில் அறிவித்த பிரதமர் மோடி, இந்தாண்டு ஜனவரியில்தான் முதல் ஆர்டரையே கொடுத்தார். அதுவும் இந்தியாவின் 130 கோடி மக்களுக்கு 1.6 கோடி தடுப்பு மருந்துகளை மட்டுமே ஆர்டர் செய்தார்.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“இன்றைக்கு, எல்லா இடங்களிலும் உள்ள தடுப்பு மருந்து மையங்களுக்கும் பூட்டு போடப்பட்டுள்ளதும், தடுப்பு மருந்துகளுக்காக மாநிலங்கள் வேண்டி நிற்பதும், தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் ஒன்றிய அரசின் குறிக்கோளற்ற தடுப்பு மருந்து கொள்கைக்குச் சான்றுகளாகும்.” என்று பிரியங்கா காந்தி தனது முகநூல் பதிவில் விமர்சித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்