உத்திரபிரதேசத்தில் கேரள கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தல் செய்யப்பட்டதற்கு பாஜகவே காரணம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் இருவர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக இந்து அமைப்பினர் தகராறில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்னையின் காரணமாக, ஜான்சி ரயில் நிலையத்தில் அவர்கள் வலுக்கட்டாயமாக ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்டனர். இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
இது தொடர்பாகத் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரியங்கா காந்தி, “ரயிலில் பயணம் செய்யும் இளம் பெண்களின் அந்தரங்க விவரங்களைக்கோர இந்தக் குண்டர்களுக்கு உதவுவது எந்த அரசியல் கட்சி? பாஜக. இந்தக் குண்டர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள்? பாஜக. எந்தக் கட்சியின் மாணவர் அணி உறுப்பினர்கள்? பாஜக. கேரளாவில் தற்போது தேர்தல் நடந்து வரும் நிலையில், ‘துன்புறுத்தலுக்கு உள்ளான’ கன்னியாஸ்திரிகள் பாதுக்காக்கப்படுவார்கள் என அமித் ஷா வெற்று அறிக்கை வெளியிட்டு வருகிறார். உண்மையா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
Which political party runs the government that enables these goons to harass and demand personal details of young women commuting on a train?
BJP
Which political party do these goons belong to?
BJP
Which party’s student wing are some of them members of?
BJP
..1/2 pic.twitter.com/cij1Z188UZ
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) March 25, 2021
இந்தச் சம்பவம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.