Aran Sei

‘கொடுத்ததாக சொல்லும் 4 லட்சம் வேலை வாய்ப்புகள் எங்கே?’ – உ.பி. பாஜக அரசிற்கு பிரியங்கா காந்தி கேள்வி

நான்கு லட்சம் வேலை வாய்ப்புகள் மாநில முழுவதும் வழங்கப்பட்டதாக கூறும் உத்தர பிரதேச பாஜக அரசு, அவ்வேலை வாய்ப்புகள் எந்தத் துறையில் எப்போது வழங்கப்பட்டது என கூற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ள அவர், உத்தரபிரதேச பாஜக அரசு 4 லட்சம் வேலை வாய்ப்புகளை இளைஞர்களிடம் கொடுத்திருந்தால், அதற்கான விவரங்களும் கண்டிப்பாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கிடைத்த பதிலை மேற்கோள்காட்டியுள்ள பிரியங்கா காந்தி,  “இதுபோன்ற தகவல்கள் எதுவும் உத்தரபிரதேச அரசிடம் இருந்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எனக்கு கிடைக்கவில்லை.” என்று கூறியுள்ளார்.

மேலும், “சட்டபேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில், ‘4 லட்சம்’ வேலை வாய்ப்புகள் எந்தத் துறைகளில் வழங்கப்பட்டன? எப்போது வழங்கப்பட்டன? என்று உத்தர பிரதேச மாநில இளைஞர்களுக்குத் தெரிய வேண்டும். சொல்லுங்கள்.” என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்:

‘உபியில் 281 சதவீதம் அதிகரித்துள்ள கொரோனா; சடலங்களை எரியூட்ட விறகின்றி தவிக்கும் மக்கள்’ – பிரியங்கா காந்தி

பெற்றோர் அனுமதியுடன் இந்து முஸ்லிம் திருமணம் – தடுத்து நிறுத்தியது உபி காவல்துறை

‘உத்தரகண்ட்டிற்கு முதலமைச்சர் வேண்டுமா? யோகி ஆதித்யநாத்தை எடுத்துக்கொள்ளுங்கள்’ – அகிலேஷ் யாதவ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்