Aran Sei

பணமதிப்பிழப்பு வெற்றி என்றால் ஊழல் ஏன் முடிவுக்கு வரவில்லை? – பிரியங்கா காந்தி கேள்வி

ணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஐந்தாவது ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இது ஒரு பேரழிவு என்றும், இந்த நடவடிக்கை வெற்றி பெற்றதாக இருந்தால், ஊழல் ஒழிந்து கறுப்பு பணம் நாட்டிற்கு ஏன் திரும்ப வரவில்லை என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு, நவம்பர் 8 ஆம் தேதி, அன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 அதிக மதிப்புள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்நிலையில், இன்று(நவம்பர் 8), தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, “பணமதிப்பு இழப்பு வெற்றி பெற்றது என்றால், ஊழல் ஏன் முடிவுக்கு வரவில்லை? ஏன் கறுப்புப் பணம் திரும்ப இந்தியாவிற்கு வரவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “ஏன் பயங்கரவாதம் முடிவுக்கு வரவில்லை? ஏன் விலைவாசி உயர்வு தடுக்கப்படவில்லை?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், ‘Demonetisation Disaster’ என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களின் நலனுக்காக இல்லை என்றும் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்