Aran Sei

வாக்குப்பதிவு இயந்திரத்தின் பயன்பாடு குறித்து கட்சிகள் மறுஆய்வு செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி

னைத்து தேசிய கட்சிகளும் மின்னனு வாக்குபதிவு இயந்திரங்களின் பயன்பாடு குறித்து மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (ஏப்ரல் 1), சட்டபேரவை தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அசாம் மாநிலத்தில் பதர்கண்டியைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் கிருஷ்ணெந்து பால் வாகனத்தில் மின்னனு வாக்குபதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

’நடப்பது அரசா இல்லை சர்க்கஸா’? – நிதி அமைச்சரை கேள்வி எழுப்பிய காங்கிரஸ்

இந்நிலையில், இதுதொடர்பாக, இன்று (ஏப்ரல் 2) தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, “ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும் போதும், மின்னனு வாக்குபதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்லும் தனியார் வாகனங்களின் காணொளிகள் வெளியாகின்றன. அதில்,  ஆச்சரியப்படத் தக்க வகையில் பின்வரும் விஷயங்கள் அச்சம்பவங்களில் பொதுவாக இடம் பெருகின்றன. 1. அந்த வாகனங்கள் பாஜக வேட்பாளர்கள் அல்லது அவர்களுடைய கூட்டாளிகளுக்குச் சொந்தமானவையாக இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

“2. காணொளிகளை வெளியிட்டவர்களை ‘தோல்வி பயத்தால் உளறுகிறவர்கள்’ என்று பொய் பரப்புரை செய்ய, தன் ஊடக இயந்திரங்களைப் பாஜக பயன்படுத்தும்.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “இதில் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், இது போன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகின்றன. ஆனால், அவற்றின் மீது நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படுவதில்லை. தேர்தல் ஆணையம் இந்தப் புகார்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து தேசிய கட்சிகளும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு குறித்து மறு மதிப்பீடு செய்ய வேண்டும்.” என்று கங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்