Aran Sei

டிஜிட்டல் செய்தி ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதிகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது – மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா திரிவேதி கண்டனம்

டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதில் மத்திய அரசு பாரபட்சமாகச் செயல்படக் கூடாது என சிவசேனா கட்சியைச் சேர்ந்தவரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான பிரியங்கா திரிவேதி தெரிவித்துள்ளார்.

மார்ச் 12 ஆம் தேதி மாநிலங்களவை செயலாளருக்கு அவர் எழுதிய கடிதத்தில், டிஜிட்டல் செய்தி இணையதளங்களை ’ஒழுங்குபடுத்த’ அரசின் புதிய விதிகள்குறித்து மார்ச் 15 ஆம் தேதி மாநிலங்களவையில் விவாதிக்க அனுமதிக்குமாறு கோரியிருந்தார்.

Photo Credit : TheWire.in

”இது அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை” என கூறிய சிவசேனா கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவரான பிரியங்கா திரிவேதி, ”இது விசயத்தில் அரசின் செயல்பாடு கவலை அளிப்பதாக உள்ளது. இணைய ஊடகங்களைக் கண்காணிப்பதற்காக, அமைச்சர்கள் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

”அரசிற்கு ஆதரவான ஊடங்களை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசுக்கு விசுவாசமான, விசுவாசமில்லாத ஊடகங்கள் என பாரபட்சம் காட்டுவது, அரசியல் அமைப்பிற்கு எதிரானது ” என அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் செய்தி ஊடகங்களிடம் ’நடுநிலையை பின்பற்ற’ மத்திய அரசுக்கு ‘அவசர’ மற்றும் ’தகுந்த உத்தரவுகளை’ வழங்குமாறு மாநிலங்களவை மூலம் கேட்டுக்கொள்வதாக, பிரியங்கா திரிவேதி அந்தக் கடித்ததில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source : TheWire.in

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்