Aran Sei

‘குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி அசாம் மக்களிடம் பேச பாஜகவிற்கு தைரியம் இல்லை’ – பிரியங்கா காந்தி விமர்சனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளோம் என்று நாடு முழுவதும் பேசிவரும் பாஜக தலைவர்களுக்கு, அசாம் மாநிலத்தில் இதை பேச தைரியம் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

நேற்று (மார்ச் 1), அசாம் மாநிலம் கவுகாத்தியில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் பரப்புரைகளில் பாஜக மலையளவு வாக்குறுதிகளை அளிக்கிறது. ஆனால், தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில், பாஜக அவற்றில் எதையும் நிறைவேற்றுவதில்லை.” என்று குற்றஞ்சாட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அசாம் என்.ஆர்.சி தடுப்பு முகாம்களில் ரேஷன் பொருட்கள் நிறுத்தம்

மேலும், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளோம் என்று நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்கள். ஆனால், அசாம் மாநிலத்திற்கு வரும்போது, அமைதி காக்க தொடங்கிவிடுகிறார்கள். இங்கு (அசாம்), அதைப்பற்றி பேச அவர்களுக்கு தைரியம் இல்லை. அதைப் பற்றி பேசக்கூட அசாம் மக்கள் அவர்களை அனுமதிக்கக்கூடாது. அதை தனியாக அமல்படுத்திவிடுவார்களா என்று பார்ப்போம்.” என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக பெரிய அளவிலான போராட்டங்கள் அசாம் மாநிலத்தில் நடைபெற்றது. அப்போராட்டங்களின் போது ஐந்து பேர் உயிரிழந்தனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்