Aran Sei

கொரோனா காலத்தில் தேர்வுகள் குழந்தைகளின் மனநலத்தை பாதிக்கும் – பிரியங்கா காந்தி

கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வரும் சூழலில் தேர்வுகள் நடத்தப்படுவதால் அது குழந்தைகளின் மனநலனை பாதிக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” கொரோனா அதிகரித்து வரும் சூழலில் மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் பொறுப்பற்ற தன்மையோடு தேர்வினை நடத்துகிறது. கூட்டம் நிறைந்த தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்படுவதற்கு பதிலாகத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் அல்லது தேர்வை நீக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்,”கொரோன அதிகரித்து வரும் சூழலில் தேர்வுகளை நடத்துவதால் கூடுதல் சுமையால் குழந்தைகளின் மனநலன் பாதிக்கப்படும். இந்தியக் கல்வி முறைகுறித்து பேசுவதை விட குழந்தைகளின் உணர்வுகளுக்காக அவர்களின் நலனுக்காகப் பெரிய அளவிலான மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும் ” என்றும் தனது ட்விட்டர் பதிவில் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்