Aran Sei

பாஜக அரசு மொழிக்கும் பண்பாட்டிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது : பாஜக வீழ்த்தப்பட வேண்டும் – பிரியங்கா காந்தி வேண்டுகோள்

பாஜக அரசு மொழிக்கும், பண்பாட்டிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை விளைவிப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா குற்றம் சாட்டிள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

126 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்திற்கு மூன்று ( மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 16) கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில்,அசாம் மாநிலத்துக்கு இரண்டாவது முறையாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, குஹம்தை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

“ஆட்சிக்கு வந்தால் முதல் அமைச்சரவை கூட்டத்தில் சிஏஏ அமல்படுத்தப்படும் ” – மேற்கு வங்காள தேர்தல் அறிக்கையில் பாஜக

அப்போது பேசிய அவர், “அசாமில் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் வலிமையான ஒரு முதல்வரை நியமிப்பதற்கு பதில் வலிமையற்ற இரண்டு முதல்வர்களை பாஜக நியமித்திருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சர்பனந்தா சோர்வால், அசாமின் முதல்வராக இருந்தபோது அசாம் மக்களின் நலனுக்காக எதையும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜகவுக்கு உடந்தையாக இருக்கும் அதிமுகவை துடைத்தெறிய வேண்டும்: சீதாராம் யெச்சூரி

அசாமில் நடந்த இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தைப் குறிப்பிட்டு பேசிய அவர் , “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது பிரதமர் எங்குப் போனார் ? பிரதமர் உங்களிடம் மன்னிப்பாவது கேட்டாரா” எனக் கேள்வியெழுப்பியுள்ளதாக என்.டி.டி.வி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு சொத்துக்களை விற்பது மோடிக்கு சூடான பஜ்ஜி விற்பது போன்றது – எம். கே. வேணு

தொடர்ந்து பேசிய அவர், ”பாஜக ஆட்சியில் அசாமின் மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. எனவே, இந்தத் தேர்தலில் நாம் பாஜகவை தோற்கடிக்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்