Aran Sei

ஏர் இந்தியா – வரலாறும் செயல்பாடுகளும்

ந்தியாவின் பொதுத் துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் குழுமத்திற்கு விற்கப்படுவதாக ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் அரசின் திட்டத்தின் கீழ் அதிக தொகையில் ஏலத்தை டாடா சன்ஸ் கோரியதால் அவர்களுக்கு விற்கப்படுவதாக முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை இயக்குநர் துஹின் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் கொண்ட குழு இறுதி செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இதயமே இதயமே உன் மௌனம் என்னைக் கொல்லுதே இதயமே’ – பிறைசூடனுக்கு அஞ்சலி

ரூ. 12,906 கோடி என்கிற அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், டாடா சன்ஸ் நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு ஏலம் கேட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்ற மற்றொரு போட்டியாளரான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் அஜய் சிங் ரூ 15,100 கோடிக்கு விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நிறுவனங்களின் 100 விழுக்காடு பங்குகளும், விமான நிலைய மேம்பாட்டைப் பராமரிக்கும் ஏஐஎஸ்ஏடிஎஸ் நிறுவனத்தின் 50 விழுக்காடு பங்குகளும் ஏர் இந்தியா நிறுவனத்திடம் வழங்கப்படும்.

ஏர் இந்தியாவை டாடாவிடம் ஒப்படைக்கும் பணி அதிகாரப்பூர்வமாக 15 நாட்களுக்குள் தொடங்கப்படும் என்றும், டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் முழுவதுமாக முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது என்றும் துஹின் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 31, 2016 ஆம் தேதி நிலவரப்படி ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, ரூ. 61,560 கோடி கடன் உள்ளது. இதில் ரூ. 15, 300 கோடியை டாடா திருப்பிச் செலுத்த வேண்டும், மீதமிருக்கும் ரூ. 46,262 கோடி கடனுக்கான பொறுப்பை அரசு ஏற்கும் என ஒப்பந்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பந்ததின்படி ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் லோகோவை முதல் ஐந்தாண்டுகளுக்கு யாரிடமும் விற்க முடியாது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க முடியாது.

‘லக்கிம்பூர் வன்முறையை ஜாலியன் வாலாபாக்கோடு ஒப்பிட்டதால் வருமானவரி சோதனை’- ஒன்றிய அரசின் மீது சரத் பவார் குற்றச்சாட்டு

டாடாவிடம் தொடங்கி மீண்டும் டாடா வசம் 

ஏர் இந்தியா நிறுவனம் டாடா ஏர் சர்வீசஸ் என்ற பெயரில் ஏப்ரல் 1932-ல்  டாடா சன்ஸ் குழுமத்தின் ஜெ.ஆர்.டி டாடா என்றழைக்கப்படும் ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா அவர்களால் ரூ 2 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்டது.

1946 ஆம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்ட நிறுவனத்திற்கு ஏர் இந்தியா லிமிடெட் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஏர் இந்தியா நிறுவனத்தின் 49 விழுக்காடு பங்குகளை இந்திய அரசு வாங்கியது.

1953 ஆம் ஆண்டு ஏர் கார்பரேஷன்ஸ் சட்டத்தை நிறைவேற்றிய இந்திய அரசு, ஏர் இந்தியா நிறுவனத்தை ஒரு தேசியமயமாக்கப்பட்ட நிறுவனமாக அறிவித்தது.

அதே ஆண்டில் டாடா குழுமத்திடம் இருந்து அதிக பங்குகளை வாங்கிய அரசு, 1977 ஆம் ஆண்டுவரை நிறுவனத்தின் தலைவராக ஜெ.ஆர்.டி டாடா இருப்பார் என அறிவித்தது.

லக்கிபூர் விவசாயிகள் மரணம் குறித்து மௌனம் ஏன் ? – பிரதமர் மோடிக்கு கபில் சிபல் கேள்வி

ஏர் இந்தியா மறுசீரமைப்பு திட்டத்தின் பகுதியாக ஏர் இந்தியா இன்டர்நேஷன்ல் லிமிடெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, உள்நாட்டு சேவைகளுக்கு என்று தனியா இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.

21 பிப்ரவரி 1960, முதன்முதலாக ஒரு போயிங் விமானத்தை ஏர் இந்தியா வாங்கியது. இதன் மூலம் ஆசியாவில் ஜெட் விமான வாங்கிய முதல் விமான போக்குவரத்து நிறுவனம் என்ற பெருமையை ஏர் இந்தியா பெற்றது.

8 ஜூன் 1962 ஆம் ஆண்டு மீண்டும் ஏர் இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதே ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி அனைத்து விமானங்களும் ஜெட் விமானங்களாக கொண்ட உலகின் முதல் விமான நிறுவனம் என சாதனையை ஏர் இந்தியா நிகழ்த்தியது.

2001 ஆம் ஆண்டு ஏர் இந்தியா நட்டத்தில் இயங்க தொடங்கியதை அடுத்து அதைத் தனியார்மயமாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆட்கொல்லி புலியும் அரசு செய்ய வேண்டியவையும் – சந்துரு மாயவன்

2004 ஆம் குறைந்த விலையில் சேவைகளை வழங்குவதற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்துடன் இந்தியன் ஏர்லைஸ் நிறுவனம் இணைக்கப்பட்டு ஏர் இந்தியா லிமிடெட் என ஆனது.

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏர் இந்தியாவின் மொத்த நட்டம் ரூ. 42,600 கோடியாக அதிகரித்தது.

ஒரே நேரத்தில் 111 விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டதும், தவறான நேரத்தில், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதும் தான் நட்டங்களுக்கு காரணம் என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டு மீண்டு தனியார்மயத்திற்கான பேச்சுகள் தொடங்கின.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 விழுக்காடு பங்குகளை விற்க ஒன்றிய அரசு முடிவு செய்ததது. விமான நிறுவனத்தை வாங்கும் புதிய உரிமையாளர்கள் அதன் கடனையும் ஏற்க வேண்டும் என அரசு அறிவித்தது. இதற்கு யாரும் விருப்பம் தெரிவிக்காததை அடுத்து திட்டம் கைவிடப்பட்டது.

லக்கிம்பூர் வன்முறை: உ.பி அரசின் விசாரணை ஆணையத்தை நிராகரித்த விவசாயிகள்

2019 ஆம் ஆண்டு மீண்டும் ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முயற்சியை மோடி அரசு எடுத்தது. இந்த 100 விழுக்காடு பங்குகளையும் விற்பதாகவும், ஏர் இந்தியாவின் கடனின் பெரும்பாலான பகுதிக்கு அரசு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் அரசு அறிவித்தது.

8 அக்டோபர் 2021, தனியார்மயமாக்குல் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா நிறுவனத்தை அதிக விலைக்கு ஏலம் கேட்டதால் டாடா நிறுவனத்திற்கு விற்பதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

கட்டுரையாளர்: நந்தகுமார், ஊடகவியலாளர்

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்