Aran Sei

பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது – நாடாளுமன்றத்தில் நிதித்துறை அமைச்சகம் தகவல்

credits : world finance

மாநிலங்களவையில்,  தேசியவாத  காங்கிரஸ்  கட்சியைச்  சேர்ந்த நாடாளுமன்ற  உறுப்பினர்  வந்தனா சவான், ”ஆத்ம நிர்பார் பாரத் (சுயசார்பு இந்தியா) அபியான் திட்டம் 2021ன் கீழ், படிப்படியாக பங்குகள் விற்கப்பட்டு, தனியார்மயம் செய்யப்பட உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் தகவல்களை அளியுங்கள்” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

மேலும், “புதிய பொதுத்துறை கொள்கையின் கீழ்,  பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாக விற்கிறோம் என எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்?” என்றும் ”பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை எந்த நேரத்தில் எவ்வாறு விற்கப் போகிறீர்கள்? என்று தெரிவிக்க வேண்டும்”  என்றும் கோரியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய நித்துறையின் இணை அமைச்சர், டாக்டர்.  பகவத் கிஷன் ராவ் காரட், “2015-16 ஆம் ஆண்டு முதலே, அரசின் கொள்கை அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் படிப்படியாக விற்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், 35 பொதுத்துறை நிறுவனங்களின் பெரும்பான்மையான பங்குகளை விற்பதையும் அதன் நிர்வாகத்தை தனியாருக்கு அளிப்பதையும் அரசு கொள்கையாக கொண்டுள்ளது. இப்போது நடக்கும் இந்த விற்பனைகள் தனியார்மயம் செய்யவே” என்று பதிலளித்துள்ளார்.

வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவே கார்ப்பரேட்டுகளுக்கு வரி குறைப்பு: நிதி அமைச்சகம் தகவல்

மேலும், ”ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் கடந்த பிப்ரவரி மாதம், புதிய பொதுத்துறை நிறுவன கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. அதில் பொதுத்துறை நிறுவனங்கள் எவ்வாறு கையாளப்படும் என்பதற்காக நான்கு முக்கிய அம்சங்கள் வெளியிடப்பட்டன. அதில், மிக குறைந்த அளவிலான பொதுத்துறை நிறுவனங்களை மட்டுமே அரசு நடத்தும் எனவும் மற்ற நிறுவனங்கள் அனைத்தும் தனியார்மயம் செய்யப்படும் அல்லது இருக்கும் நிறுவனங்களுடன் இணைக்கப்படும் அல்லது மூடப்படும். வருமானம் இல்லாத துறைகளில் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் செய்யப்படும் அல்லது மூடப்படும்” என்று பகவத் கிஷன் ராவ் காரட் பதிலளித்துள்ளார்.

பதினான்கு ஆண்டுகள் சிறைவாசம் முடித்தோரை விடுதலை செய்ய வேண்டும் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்

”பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் விற்பனை என்பது தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒன்று, இது எப்போது விற்பனை செய்யப்படும் என்பது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுப்படும். சில பரிவர்த்தனைகள் 2021-22 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் அரசியல் காரணங்களினால் 230 பேர் கொல்லப்பட்டுள்ளனர் – ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தகவல்

பிபிசிஎல், ஏர் இந்தியா லிமிடட், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பிஇஎம்எல் லிமிடட் உள்ளிட்ட 21 பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது விற்கப்பட்டு வருகின்றன, 8 பொதுத்துறை நிறுவனங்கள் முழுமையாக விற்கப்பட்டுள்ளன,  மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை பாதியில் உள்ளது, மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, என்றும் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர்.  பகவத் கிஷன் ராவ் காரட் பதிலளித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்