2021-22ம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையின் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள வங்கித் துறையைத் தனியார்மயமாக்குவதற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக அனைத்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில், ”வரும் 2021-22ஆம் நிதியாண்டில் அரசு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளை ரூ.1.75 லட்சம் கோடி அளவுக்கு விற்பனை செய்தவதன் வழியாக நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகளும், இரு வங்கிகளின் பங்குகளும் அடங்கும். காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 74 சதவீத அளவுக்கு, பாதுகாப்பு விதிகளுடன் அனுமதிக்கப்படுகிறது.” என்று அவர் அறிவித்தார்.
“சோசியலிசம் என்பது சுமை; பொதுத்துறை நிறுவனங்களை விற்பதே எங்கள் நோக்கம்” – நிர்மலா சீதாராமன்
குறிப்பாக, 2021-22ஆம் நிதியாண்டு தொடக்கத்தில் ஐடிபிஐ வங்கி, பிபிசிஎல், ஷிப்பிங் கார்ப்பரேஷன், கன்டெய்னர் கார்ப்பரேஷன், நீலாச்சல் இஸ்பத் நிகம் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனை செய்யப்படும் என்றும் எல்ஐசி காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
லட்சுமி விலாஸ் வங்கி : இலாபம் தனியாருக்கு, இழப்பு மக்களுக்கா ?
இந்நிலையில் இன்றைய தினம், ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில், பொதுத்துறை வங்கிகளை தனியாரிடம் விற்கும் மத்திய அரசைக் கண்டித்து மார்ச் 15, 16 ஆகிய இரு தினங்கள் இந்தியா முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டிருப்பதாக அனைத்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு (யுஎஃப்பியு) தெரிவித்துள்ளது.
வங்கிகளின் கட்டணக் கொள்ளை – மக்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை
வங்கித் துறை தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளைக் கண்டித்து கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி, நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கஙகள் ஆர்பாட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.