நேற்று (பிப்பிரவரி 22) ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தின் யர்ரகொண்டபாலத்தில் உள்ள விகாஸ் பப்ளிக் என்ற தனியார் பள்ளியில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி மாணவிகளின் பெற்றோர்களும் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவிகளுக்கு இடையூறாக இருந்தால் அவர்கள் தங்களது ஹிஜாபை கழட்டிக் கொள்ளலாம் என்று பள்ளி முதல்வர் கோட்டி ரெட்டி கூறியுள்ளார். “ஹிஜாபை கட்டாயமாக அகற்றுமாறோ, ஹிஜாப் அணிந்தால் பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டோம் என்றோ நாங்கள் கூறவில்லை. ஹிஜாப் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாக பள்ளி முதல்வர் கோட்டி ரெட்டி கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஒரு கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வந்த 2 இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
“நாங்கள் ஆரம்பத்திலிருந்தே ஹிஜாபை அணிந்து வருகிறோம், எங்கள் கல்லூரி அடையாள அட்டைகளில் கூட ஹிஜாப் அணிந்த புகைப்படம்தான் உள்ளது. ஆனால் இப்போது ஹிஜாப் அணிந்துகொண்டு கல்லூரிக்கு வரமுடியாது என்று கல்லூரி முதல்வர் கூறியுள்ளதாக அந்த மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.