Aran Sei

சிறைக்கைதிகளில் 27% பேர் படிப்பறிவில்லாதவர்கள் – உள்துறை அமைச்சகம் தகவல்

Image Credits: DNA India

ந்தியாவில் சிறையில் உள்ள கைதிகளில் 27.37 சதவீதம் பேர் படிப்பறிவில்லாதவர்கள் என்று நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு, டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், சிறையில் உள்ள 4,78,600 பேரில், 1,32,729 பேர் படிப்பறிவில்லாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைகளில் உள்ள 32% பேர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் – உள்துறை அமைச்சகம் தகவல்

அவர்களில் 5,677 பேர் தொழிலநுட்பத்தில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,98,872 பேர், அதாவது 41.55 சதவீதம் பேர் 10 ஆம் வகுப்பிற்கு கீழ் படித்தவர்கள் என்றும், 1,03,036 பேர், அதாவது 21.52 சதவீதம் பேர் பத்தாம் வகுப்பிற்கு மேலும், பட்டப்படிப்பிற்கு கீழும் படித்தவர்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி பெண் உரிமை செயற்பாட்டாளர் லூஜெய்ன் விடுதலை – சிறையிலும் கைதிகள் உரிமைக்காக போராடியவர்

30,201 பேர், அதாவது, 6.31 சதவீதம் பேர் பட்டதாரிகள் என்றும், 8,058 பேர், அதாவது 1.68 சதவீதம் பேர் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்தில் 1,01,297 பேர் சிறையில் இருப்பதாகவும், அதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தில் 44,603 பேரும், பீகாரில் 39,814 பேரும் சிறையில் இருப்பதாக உள்துறை அமைச்சர் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்