இந்தூர் தலைமை நீதிபதிக்கு, “உச்சநீதிமன்ற நீதிபதியிடமிருந்து அழைப்பு” வந்ததையடுத்து, இந்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த, நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபாருக், பிப்ரவரி 6 ஆம் தேதி நள்ளிரவு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தூர் மாவட்ட தலைமை நீதிபதியைத் தொலைபேசியில் அழைத்த உச்சநீதிமன்ற நீதிபதி, இந்தூர் நீதிமன்றம் முனாவருக்கு பிறப்பித்த வாரண்டை நிறுத்தி வைத்ததோடு, அவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது என்றும், விவரங்களுக்கு உச்சநீதிமன்ற இணையதளத்தை பார்க்குமாறு கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம் – மாநிலத்திற்கு அதிகரித்த நிதிச்சுமை
முன்னதாக, மற்றொரு வழக்கில் ஆஜராகுமாறு, முனாவருக்கு இந்தூர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்தது என்றும், நீதிமன்றத்திலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை, என்றும் இந்தூர் சிறை நிர்வாகம் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் -யிடம் பேசிய இந்தூர் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர், ராஜேஷ் பாங்கடே, ”எங்களுக்கு நீதிமன்றத்திடம் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வராத நிலையில், இந்தூர் நீதிமன்ற நீதிபதியைத் தொடர்பு கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி, முனாவரின் வாரண்ட் நிறுத்தி வைப்பு மற்றும் ஜாமீன் வழங்கப்பட்டது, தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு இருக்கிறது எனக் கூறியதையடுத்து, அதை ஏற்று முனாவரை இரவு 11 மணிக்கு ஜாமீனில் விடுதலை செய்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மோடி பங்கேற்கும் நிகழ்வை புறக்கணித்த மம்தா பானர்ஜி – கடந்த கால அவமதிப்பு காரணமா?
வழக்கை நீதிபதி ஆர்.எஃப். நரசிம்மன் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, இந்தூரின் துக்கோன்கஞ்ச் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் இடக்கால ஜாமீன் வழங்கியதோடு, உத்திரபிரதேசத்தின் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்ட வாரண்டையும் நிறுத்தி வைத்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முனாவரின் உறவினர் ஜைத் பதான், “ஃபாருக் ஒரு மணி நேரத்திற்கு முன்பு விடுவிக்கப்பட்டார். அவரை நாங்கள் ஜுனகாட்டிற்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம். அவர் பாதுகாப்பு இருக்கிறார்” எனக் கூறியதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நகைச்சுவை நிகழ்வில் கலந்துகொண்ட முனாவர் ஃபாருக், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக, பாஜக சட்டமன்ற உறுப்பினர் மாலினி சிங் கவுரின் மகன் ஏக்லவ்யா சிங் கவுர், கொடுத்தப் புகாரின் பெயரில், ஜனவரி 1 ஆம் தேதி இந்தூரில் கைது செய்யப்பட்டதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.