Aran Sei

பிரதமரின் கண்ணீரை முதலை கண்ணீருடன் ஒப்பிடாதீர்கள்; முதலைகள் பாவம் – தி டெலிகிராப்

credits : the telegraph

பாவப்பட்ட முதலைகளை குறை கூறாதீர்கள், அவை சோகமாக இருக்கும்போது அழுவதில்லை, மாறாக, நன்றாக உணவு உண்ணும்போது தான் அழுகின்றன” என்று நேற்றைய தினம் பிரதமர் அழுததை மறைமுகமாக விமர்சித்து தி டெலிகிராப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று, 2,54,288 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,62,85,069 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றால் 2,95,508 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் 4142 பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், நேற்று வாரணாசியின் முன்களப் பணியாளர்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ”கொரோனா நோய்த்தொற்று நமக்கு மனதிற்கு நெருக்கமான பலரை நம்மிடமிருந்து பறித்துச் சென்றுவிட்டது. கொரோனா நோய்த்தொற்றால் மரணமடைந்தவர்களுக்கு என் மரியாதையையும், அவர்களை இழந்த வாடும் அவர்களது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறேன்” என்று மிகவும் உணர்வச்சிவசப்பட்டு கண்ணீருடன் பேசியிருந்தார்.

‘சட்டவிதிகளை மீறி கட்டிடம் கட்டிய ஈஷா மையம்’ – விதிமீறல் ஆவணங்களை வெளியிட்ட பூவுலகின் நண்பர்கள்

இதையடுத்து சமூக வலைதளமான ட்விட்டரில், பிரதமர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார் எனும் ஹேஷ்டேக் வைரலானது.

“உங்களுக்கு முதலை கண்ணீர் என்னவென்று தெரியாதென்றால், அதை இந்த காணொளியில் காணலாம்” என்று இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் பதிவிட்டிருந்தார்.

‘முதலில் கும்பமேளா, இப்போது புனிதயாத்திரை; தவறுகளிலிருந்து எதையும் கற்கவில்லையா?’ – உத்தரகாண்ட் அரசிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி

இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ள, அனைத்தி இந்திய மாணவர்கள் அமைப்பு, ”தடுப்பூசிகள் தட்டுப்பாடு தொடர்பாக ஒரு வார்த்தையைக் கூட பிரதமர் பேசவில்லை, லட்கணக்கானோர் துயரத்தில் வாடிக் கொண்டிருக்கும் போது, புதிய நாடாளுமன்ற கட்டிடப் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி போராடிக் கொண்டிருக்கும் மாணவர்கள் தொடர்பாக வாய்திறக்கவில்லை. அவர் சாதரணமாக வந்து முதலை கண்ணீரை வடித்துவிட்டு சென்றுவிட்டார்” என்று பதிவிட்டுள்ளனர்.

எகிப்தின் கோரிக்கையை ஏற்று தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல் -11 நாட்களாக நடந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி- பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி

இந்நிலையில், இன்று (22-5-21), தி டெலிகிராப் பத்திரிக்கையில், முதலைக் கண்ணீர் என்றால் என்ன என்பதை விளக்கி கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒரே விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு

அதில், டி.மால்கம் ஷேனர் மற்றும் கெண்ட் ஏ வியட் எனும் அமெரிக்க விஞ்ஞானிகள், முதலைகளிடம் நேரடியாக மேற்கொண்ட பரிசோதனையில், முதலைகள் உணவருந்தும்போது தான் கண்ணீர் விடுகின்றன என்பதை நிறுவியுள்ளதாகவும், இது பயோசயின்ஸ் எனும் பத்திரிகையில் வெளியாகியுள்ளதாக, தி டெலிகிராப் குறிப்பிட்டுள்ளது.

மகாராஷ்ட்ராவில் 13 நக்சல்கள் சுட்டுக்கொலை: தேடுதல் வேட்டை தொடருமென காவல்துறை அறிவிப்பு

இதைச் சுட்டிக்காட்டியுள்ள தி டெலிகிராப் பத்திரிகை, ”பாவப்பட்ட முதலைகளை குறை கூறாதீர்கள். அவை சோகமாக இருக்கும் போது அழுவதில்லை, மாறாக, நன்றாக உணவு உண்ணும்போது தான் அழுகின்றன” என்று பிரதமர் நரேந்திர மோடி கண்ணீர் விட்டதை மறைமுகமாக விமர்சித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்