Aran Sei

ஜனநாயகத்தைப் பற்றி காங்கிரஸ் பாடம் எடுக்க வேண்டாம் : ராகுல்காந்திக்கு மோடி பதில்

credits : the indian express

டெல்லியில் கடந்த 24-ம் தேதி விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக, குடியரசு தலைவரைச் சந்திக்க காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுக்கப்பட்டது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ”இது இந்தியாவின் சிந்தனை மீது நடத்தப்படும் தாக்குதல். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் அலுவலகங்களிலிருந்து வெளியேறுவதை அரசு தடுக்கிறது. இந்தியாவில் ஜனநாயகம் நிஜத்தில் இல்லை,அது கற்பனையில் தான் இருக்கிறது ” என்று கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ”கற்பனை ஜனநாயகத்தில் இந்தியா” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜம்மூ காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்த்ரி ஜன் ஆரோக்ய யோஜனா எனும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

`இளைஞர்களே, கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுடன் பேசுங்கள்’ – பிரதமர் மோடி உரை

”ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நாள். இந்தத் திட்டத்தால் ஜம்மு காஷ்மீர் மக்கள் அனைவரும் பயனடைய போகிறார்கள். வாஜ்பாயின் பிறந்த நாளான நேற்று இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்த விரும்பினேன். ஜம்மு காஷ்மீருடன் வாஜ்பாயிக்கு சிறப்பு தொடர்பு இருந்தது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக போலி செய்தி – ஏஎன்ஐ நிறுவனம் மீது குற்றச்சாட்டு

தொடர்ந்து பேசிய பிரதமர், ஜனநாயகம் பற்றி தனக்கு தினந்தோறும் பாடமெடுப்பவர்களுக்கு ஜம்மு காஷ்மீரில் அமைதியாக நடந்து முடிந்த மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தவறாக வழிநடத்துகின்றனர் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

”ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதனால் தான் அந்த மக்களால் விரைவாக அவர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடிந்தது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் புதுச்சேரியில் தேர்தல் நடத்தப்படவில்லை. அம்மாநிலத்தில் ஆட்சியை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி எனக்கு தினந்தோறும் ஜனநாயகம் பற்றி பாடமெடுக்கின்றனர்” என கடுமையாகச் சாடியுள்ளார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் – ‘பிரதமர் கலப்படம் இல்லாத பொய்யைச் சொல்கிறார்’

”நாங்கள் ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தில் அங்கம் வகித்தோம் இருப்பினும் பஞ்சாயத்துக்கான தேர்தல் நடைபெற்று, மக்கள் அவர்களின் பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் அங்கம் வகித்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறினோம் என்று கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியின் ”கிராம சுயராஜ்யம்” என்ற கனவை ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நிறைவேற்றியுள்ளதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்