Aran Sei

பஞ்சாப் விவசாயிகள் போராட்ட எதிரொலி – நிகழ்ச்சியை ரத்து செய்து திரும்பிச் சென்ற பிரதமர் மோடி

ன்று (05.01.2021) விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தினால் பஞ்சாப் மாநிலத்தின் ஹுசைனிவாலாவிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கார் சுமார் 20 நிமிடங்கள் வரை சிக்கிக்கொண்டது. இதனால் ஏற்பட்ட “பாதுகாப்புக் குறைபாடு” காரணமாகப் பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் (MHA) தெரிவித்துள்ளது.

“பஞ்சாப் மாநிலத்தில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகப் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் இருந்து ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்குச் செல்வதற்காக இன்று காலை பதிண்டாவில் தரையிறங்கினார். “மழை மற்றும் மோசமான வானிலை காரணமாகப் பிரதமர் சுமார் 20 நிமிடங்கள் வரை அங்குக் காத்திருந்தார். ஆனால் வானிலை சீரடையாததால், சாலை வழியாகச் சென்று தேசிய தியாகிகள் நினைவிடத்தைப் பிரதமர் பார்வையிடுவார் என்று முடிவு செய்யப்பட்டது.”

அன்னை தெரேசாவின் நிறுவனத்திற்கு உரிமம் மறுக்கும் ஒன்றிய அரசு – உத்தரவை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கு

“ஆனால் சாலை வழியாகச் சென்றால் மேலும் 2 மணி நேரம் ஆகும் என்பதால் பஞ்சாப் காவல்துறையின் டிஜிபியிடம் பேசி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திய பின்னரே பிரதமர் சாலை வழியாகப் பயணிக்கத் தொடங்கினார்,” என்று உள்துறை அமைச்சகம் (MHA) வெளியீட்டுக்குள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

பிரதமரின் பஞ்சாப் பயணத் திட்டம் மற்றும் அட்டவணை ஆகியவை மாநில அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. தற்செயல் திட்டத்தைக் கருத்தில் கொண்டு, பஞ்சாப் அரசு, சாலை வழியிலும் கூடுதல் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் பஞ்சாப் அரசு அதனைச் சரியாகச் செய்யவில்லை. இந்த பாதுகாப்பு குறைபாட்டினால் மீண்டும் பதிண்டா விமான நிலையத்திற்கே மோடி திரும்பச் செல்ல முடிவு செய்யப்பட்டது.

ஆகவே உள்துறை அமைச்சகம் பஞ்சாப் மாநில அரசிடம் இருந்து இதுகுறித்து விரிவான அறிக்கையைக் கோரியுள்ளது மற்றும் தங்களது தவறுக்குப் பொறுப்பெடுத்து அதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்துச் சரிசெய்ய வேண்டும்”என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.

மோடியின் பெரோஸ்பூர் வருகைக்கு ஏற்கனவே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். பஞ்சாபின் மிகப்பெரிய விவசாய அமைப்புகளில் ஒன்றான பாரதிய கிசான் யூனியன் பிரதமரின் வருகையை எதிர்த்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகித்தது.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்