மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்தற்கு, பிரதமர் நரேந்திர மோடியின் ஆணவம் தோற்கடிக்கப்பட்டதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் 25-வது ஆண்டு விழா நேற்று பாட்னாவில் நடைபெற்றது. பேரணியில் உரையாற்றிய லாலு, விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றதற்காக வாழ்த்தியுள்ளார். விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யும் சட்டம் இயற்றப்படும் வரை போராட்டம் தொடரம் என்று தெரிவித்துள்ளார். மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாநிலத்திலும், ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், விவசாயிகள் தரப்பில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விவசாயிகள், ஏழை மக்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் ஆட்சி அமைப்போம். பெண்களுக்கு அதிக அளவில் இடங்கள் ஒதுக்கப்படும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
Source: freepressjournal
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.