Aran Sei

“கம்யூனிசம் ஒரு காட்டுத்தீ; அது தன் வழியே வரும் அனைத்தையும் எரித்து தின்று விடும்” – தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் எச்சரிக்கை

credits : freepress journal

“இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் அதிகார வெறிதான் மதவாத, குற்றப் பின்னணி கொண்ட, பிற்போக்கு இயக்கங்களுடன் அந்தக் கட்சிகள் கூட்டணி வைப்பதற்கான காரணம்” என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளாவில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர் மோடி இடது ஜனநாயக முன்னணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

“சுவாமியே சரணம் ஐயப்பா” என்று பேச்சைத் தொடங்கிய பிரதமர், ”இடது சாரிகள் கேரளத்தை மிகவும் பிற்போக்கான மாநிலமாக காட்ட முயன்றனர், தற்போது தங்களுடைய முகவர்களின் மூலமாக வழிபாட்டு தளங்களைச் சிதைக்க முயல்கின்றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளாவின் ஜிகாத்திய இயக்கங்களுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆதரவளிக்கிறது – யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

”சுவாமி ஐயப்பனின் பக்தர்களுக்கு முறையான  வரவேற்பு அளிக்கப்படவில்லை, அவர்கள் லத்தியின் மூலமாக வரவேற்கப்பட்டார்கள். ஐயப்பனின் அப்பாவி பக்தர்கள் குற்றவாளிகள் அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.

கேரளாவில் மதமாற்றம் மற்றும் சபரிமலை விவகாரத்தை கையிலெடுத்த பாஜக: இடது ஜனநாயக முன்னணிக்கு நெருக்கடியா?

”வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதும், உலகளவில் தோல்வியுற்ற சித்தாந்தமுமான கம்யூனிசத்தின் வழியாக இந்திய கலாச்சாரத்தை மிகவும் தவறான வழியில் இடது சாரிகள் காண்பிக்கின்றனர், இனியும் அதை  அனுமதிக்க முடியாது” என்று கூறியுள்ள பிரதமர், “ இதனால்தான் அம்பேத்கர், கம்யூனிசம் என்பது ஒரு காட்டுத்தீ, அது தன் வழியே வரும் அனைத்தையும் எரித்துத் தின்று விடும் என்று கூறியுள்ளார்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இந்தியாவில் பல்லாண்டுகள் இருப்பவர்களுக்கு வாழ உரிமையில்லையா?; சந்தேகம் வேண்டாம் சிஏஏ கேரளாவில் வராது’ – பினராயி விஜயன்

”இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் அதிகார வெறி தான் மதவாத, குற்றப் பின்னணி கொண்ட, பிற்போக்கு இயக்கங்களுடன் அந்தக் கட்சிகள் கூட்டணி வைப்பதற்கான காரணம்” என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்