Aran Sei

தெலுங்கானா மக்களை பிரதமர் மோடி அவமதித்துவிட்டார்; பாஜகவினரின் உருவ பொம்மைகளை எரியுங்கள் – டிஆர்எஸ் செயல் தலைவர் உத்தரவு

ந்திரப் பிரதேசம் சரியாகப் பிரிக்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளதை எதிர்த்து பல டிஆர்எஸ் தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

“தெலுங்கானா மக்களின் பல்லாண்டு கால உற்சாகமான போராட்டம் மற்றும் தியாகங்களை” பிரதமர் அவமதித்து விட்டதாகவும், அதனைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தியும், பாஜகவினரின் உருவ பொம்மைகளை எரித்தும் போராட்டங்களை நடத்துமாறு தனது கட்சிக்காரர்களிடம் டிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைவர்கள் இஸ்லாமியப் பெண்களை ஒடுக்க கூடாது – மலாலா யூசுஃப்ஸை

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தெலுங்கானாவுக்கு எதிராகப் பிரதமர் விஷத்தைக் கக்குகிறார். தெலுங்கானாவின் வளர்ச்சியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை, குஜராத்தை மிஞ்சிவிடுவோம் என்று மோடி பயப்படுகிறார். மேலும் தெலுங்கானா விரைவில் உருவாக்கப்படாமலிருந்தால், தனி மாநிலத்திற்காக இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார்கள் என்று நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவ் தெரிவித்துள்ளார்.

மோடியின் கருத்து தெலுங்கானா மக்களை அவமதிப்பதாகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானகவும் உள்ளது என்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் தயாகர் ராவ் கூறியுள்ளார்.

ஹிஜாப் விவகாரம்: என்ன உடை அணிய வேண்டும் என்பது பெண்களின் உரிமை – பிரியங்கா காந்தி

தெலுங்கானா மாநிலம் உருவாகுவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் செய்த தியாகத்தைப் பிரதமர் அவமதித்துவிட்டதாக நலத்துறை அமைச்சர் கொப்புலா ஈஸ்வர் கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கிய இந்தியக் குடியரசுத் தலைவரையும், நாடாளுமன்றத்தையும் பிரதமர் அவமானப்படுத்தியுள்ளார். பிரதமர் உடனடியாக தெலுங்கானா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்மூர் சட்டமன்ற உறுப்பினர் ஜீவன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்