Aran Sei

’பாகிஸ்தான், சீனா செல்ல நேரம் உள்ள பிரதமருக்கு விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை’ – பிரியங்கா காந்தி

பாகிஸ்தான் செல்லவும் சீனா செல்லவும் நேரம் உள்ள பிரதமருக்கு விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை என்று பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று (பிப்ரவரி 10) உத்தரபிரதேசம் சகரான்பூர் மாவட்டத்தில் நடந்த விவசாயிகளின் மகா பஞ்சாயத்து கூட்டத்தில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றுள்ளார்.

அங்கு பேசிய அவர், “இந்த நாட்டை தற்சார்பு நாடாக விவசாயிகள்  மாற்றினார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள், புதிய விவசாய சட்டங்களின் மூ லம் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளையோ அல்லது அவர்கள் எதற்காகபோராடுகின்றனர் என்பதையோ மத்திய அரசு புரிந்துகொள்ளவே இல்லை.” என்று குற்றஞ்சாட்டியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த பிரியங்கா காந்தி – 144 தடை உத்தரவு பிறப்பித்த உத்திர பிரதேச அரசு

“விவசாயிகளை தேசவிரோதிகள் என்று ஆட்சியில் இருப்பவர்கள் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் ஆட்சியில் இருப்பவர்கள்தான் தேசவிரோதிகள். விவசாயிகளை ஆட்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். ஆனால்விவசாயிகளின் இதயம் ஒருபோதும் நாட்டுக்கு எதிராக இருந்தது இல்லை.” என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

“பாகிஸ்தான் செல்லவும் சீனா செல்லவும் பிரதமருக்கு நேரம் இருக்கிறது. ஆனால் தனது தொகுதியின் எல்லைப் பகுதியில் உள்ள விவசாயிகளை சந்திக்கத்தான் அவருக்கு நேரமே இல்லை.” என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

முன்னதாக, சகரான்பூர் மாவட்டத்திற்கு பிரியங்கா காந்தி வருவதையொட்டி, அந்தப் பகுதியில் 144 தடை  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்