Aran Sei

டெல்லியில் பட்டியலின சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்- திரைவிலகுகிறதா உண்மைகள்?

டெல்லியில் ஒன்பது வயது சிறுமி பாலியல்வன்கொடுமை செய்யப்பட்ட  விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பிராமண பூசாரி, சம்பவம் நடந்த அன்று இரவுக் குற்றத்தை ஒத்துக்கொண்டதாக  அந்தச் சிறுமியின் அண்டை வீட்டாரான தீக்க்ஷா  தெரிவித்துள்ளார்.

டெல்லி கண்டோன்ட்மண்ட் பகுதியை சேர்ந்த தலித் சிறுமி, கடந்த ஆகஸ்ட் 1 அன்று  சுடுகாட்டிற்கு தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார். இந்நிலையில் மாலை ஆறு மணியளவில் அந்தச் சுடுகாட்டில் பூசாரியாகப் பணிபுரியும்   ராதே ஷ்யாம் அந்தச் சிறுமியின் தாயாரை அங்கு அழைத்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் தாயார் அங்குச் சென்று பார்த்தப்போது சிறுமி உயிரிழந்திருந்தார். இதுகுறித்து   சிறுமியின் தாயிடம் தெரிவித்த   ராதே ஷ்யாம் , சிறுமி மின்சாரம் தாக்கி உயரிழந்ததாக கூறியுள்ளார்.

இதுகுறித்து  தெரிவித்துள்ள சிறுமியின் தாய், “நான் என் மகளை எழுப்பிவிட நினைத்தேன். அவளது கண்கள் மூடி இருந்தது, உதடுகள் கருத்திருந்தது. எனது மகளின் உடை ஏன் ஈரமாக உள்ளது என்று பூசாரியிடம் கேட்டபோது அவர் நடுங்கத் தொடங்கி காவல்துறையை அழைக்க வேண்டாமென கூறினார்”  என்று  குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவல்துறையை அழைத்தால் அவர்கள் பிரேத பரிசோதனை செய்யச் சொல்லுவார்கள்; “இதன் வழியாகச் சிறுமியின் உடல் உறுப்புக்கள் திருடப்படும்”  “சிறுமியை இங்கேயே எரித்து, இந்தப் பிரச்னையை முடித்து விடலாம் என்று கூறினார். எனக்கு என்ன  செய்வதென்றே புரியவில்லை, கையறு நிலையில் இருந்தேன்”  என்றும்  சிறுமியின் தாய் கூறியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள  சிறுமியின் அண்டை வீட்டார்  தீக்க்ஷா,”சிறுமியின் தாய் அவரது மகள்  மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாகக் கூறினார். அவளது உடல் எங்கேயெனக் கேட்டபோது பூசாரி எரித்துவிட்டதாகக் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நாங்கள் பூசாரியை வெளியே அழைத்தபோது, அவர் மற்றவர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தார். இந்நிலையில், அங்குத் திரண்டிருந்தவர்கள் சிறுமியின் சடலத்தைச் சிதையிலிருந்து எடுக்க முயன்றபோது , அவளின் கால்கள் மட்டுமே எஞ்சி இருந்தது” என்றும் தீக்க்ஷா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அங்குத் திரண்டிருந்தவர்கள் இதுகுறித்து கோபத்தோடு பூசாரியிடம் கேள்வி எழுப்பிய நிலையில், பூசாரி குற்றத்தை ஒத்துக்கொண்டதாகச் சிறுமியின் அண்டை வீட்டாரான தீக்க்ஷா  தெரிவித்துள்ளார்.

மேலும்,  சம்பவம் நடந்த அன்று  சிறுமியின் பெற்றோரைக் காவல்துறையினர்   காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடுத்து நாள் மாலைவரை விடுவிக்கவில்லை என்றும், அப்போது  அந்தச் சிறுமி மின்சாரம் தாக்கித் தான் இறந்தார். பாலியல்வன்கொடுமை செய்யப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தாகவும் சிறுமியின் பெற்றோர்  குற்றம்சாட்டியுள்ளனர்.

SOURCE;THE WIRE

தொடர்புடைய பதிவுகள்;

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சிறுமியின் உடல் வலுக்கட்டயாமாக தகனம் – போராட்டத்திற்கு பிறகு குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்த காவல்துறை

டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலின சிறுமி – நீதி கோரும் திரைக்கலைஞர்கள்

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்