Aran Sei

விவசாயிகள் குறித்து கவலை கொள்ளாத ஒன்றிய அரசு – சரத் பவார் குற்றச்சாட்டு

Image Credits: DNA India

விவசாய உற்பத்தி விலை குறைந்து கொண்டிருக்கிறது ஆனால் பாதிப்படையும்  விவசாயிகள் குறித்து  ஒன்றிய அரசு எவ்விதக் கவலையும் கொள்ளவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

புனே மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், “விவசாயத்தின் மீது எண்ணற்ற கேள்விகள்  எழுந்துள்ளன. விவசாயப் பொருட்களுக்கான ஆதார விலை குறைந்து கொண்டிருக்கிறது.  விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை தூக்கி எறிகின்றனர். ஏன் முதல்  கூட கிடைப்பதில்லை. இது எல்லோருக்குமான பிரச்சனைகரமான சூழல்” என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, கெடுவாய்ப்பாக ஒன்றிய அரசு எவ்வித கவலையும் கொள்ளவில்லை என்றும், இதில் மாறுப்பட்டு கரும்பு விலை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது  என்றும்  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

source: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்