Aran Sei

 காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவதாக புகார் – விசாரணை மேற்கொள்ள பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா முடிவு

காஷ்மீரில் பத்திரிகையாளர் துன்புறுத்தபடுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட ‘உண்மைக் கண்டறியும் குழு’ ஒன்றை அமைக்க இருப்பதாக பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா (பிசிஐ)தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி அளித்த தகவலின் பெயரில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளது.

’அக்டோபர் 2க்குள் இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜல சமாதி அடைவேன்’ – ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ்

அந்த தகவல் பரிமாற்றத்தில், காஷ்மீரில் அதிகாரிகளால் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுகுறித்து முப்தி பட்டியலிட்டிருந்தார்.

”ஜம்மு காஷ்மீரில் பத்திரிக்கையாளர்கள் அச்சுறுத்தபடுவது மற்றும் துன்புறத்தப்படுவது தொடர்பாக மெஹபூபா முப்தியின் தகவலைத் தொடர்ந்து பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவர் தானாக முன்வந்து மூன்று பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளார். டைனிக் பாஸ்கர் குழுமத்தின் ஆசிரியர் பிரகாஷ் துபே, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸைச் சேர்ந்த பத்திரிகையாளர் குர்பீர் சிங், ஜான் மோர்ச்சாவின் ஆசிரியர் மருத்துவர் சுமன் குப்தா ஆகியோர் அடங்கிய குழு இந்த விவகாரத்தை விசாரிக்கும்” என பிசிஐ-யின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘கோவாவில் பாஜகதான் உண்மையான மாட்டிறைச்சிக்கு ஆதரவான கட்சி’ – சிவசேனா விமர்சனம்

உண்மை கண்டறியும் குழுவிற்கு முழு ஒத்துழைப்பு மற்றும் உதவியை வழங்குமாறு ஜம்மு காஷ்மீர் அதிகாரிகளை பிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

”இந்த விவகாரத்தில் உண்மைக் கண்டறியும் குழு, அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அதில், கிடைக்கப்பெறும் தகவல்களைக் கொண்டு விரைவில் கவுன்சிலிடம் அறிக்கையைச் சமர்பிக்க வேண்டும்” என பிசிஐ அதன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு எதிரான சோதனைகள், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நோட்டீஸ்கள் மற்றும் சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களில் ஒன்றான் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) கீழ் பதியப்பட்ட வழக்குகள் தொடர்பான பிரச்னைகள்குறித்து பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவிற்கு மெகபூபா முப்தி சில தினங்களுக்கு முன்பாக கடிதம் எழுதியிருந்தார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஆப்கானிஸ்தான்

ஒரு ஜனநாயக அமைப்பில், அரசாங்கம் அதன் ஊழியர்களுக்கு உரிய பொறுப்புணர்வுடன் வெளிப்படையான முறையில் செயல்படுவதற்கு, ஒரு சுதந்திரமான, சுயாதீனமான ஊடகம் முக்கியமானது, அத்தியாவசியமானது” என மெகபூபா அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்