Aran Sei

திரிபுராவில் பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த தலைமைச் செயலாளர்: நோட்டீஸ் அனுப்பிய இந்திய பிரஸ் கவுன்சில்  

திரிபுரா மாநிலத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகத் திரிபுரா மாநில தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனருக்கு இந்திய பிரஸ் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக மிரட்டல் விடுத்ததற்காக அகர்தலா ஊடகவியலாளர்கள் பேரவையின் தலைவர் சுபால் குமார் டே மற்றும் ஒருங்கிணைப்பாளர் சேகர் தாட்டாவின் புகாரின் அடிப்படையில், இந்திய  பிரஸ் கவுன்சிலின் செயலாளர் அனுபமா பட்நாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் அதிகாரிகள் பதிலளிக்குமாறு அந்த நோட்டீஸில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊபா சட்டத்தில் கைதான பத்திரிக்கையாளர் சித்திக் காப்பன்: 5000 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த காவல்துறை

இந்திய பிரஸ் கவுன்சில் கடந்த மார்ச் 17 ஆம் தேதிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இது கடந்த வாரம்தான்  கிடைக்கப்பெற்றதாகத் தெரிவித்துள்ள திரிபுரா உள்துறை செயலாளர் சரதீந்து சௌத்ரி, “கடந்த வாரம் தான் இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்றுள்ளது. இதுகுறித்து நாங்கள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை” என தி வயர் இணையதளத்திற்கு தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தார்.

திரிபுரா முதலமைச்சர் மிரட்டலை தொடர்ந்து கடந்த 6 மாதங்களில் 23 பத்திரிக்கையாளர்கள் மிரட்டப்பட்டிருக்கின்றனர் என பத்திரிக்கையாளர்கள் பேரவை குற்றம்சாட்டியிருப்பதாக தி வயர் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 11 ஆம் தேதி சப்ரூம் துணை பிரிவில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என அகர்தலா பத்திரிக்கையாளர்கள் பேரவை புகாரில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்