Aran Sei

டெல்லியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் – பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா கண்டனம்

டெல்லியில் புராரி மைதானத்தில் நடைபெற்ற இந்து மகாபஞ்சாய்த் கூட்டத்தின்போது ஊடகவியலாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) கண்டனம் தெரிவித்துள்ளது.

”நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் மறைமுக நிகழ்ச்சி நிரலை ஏற்கும் வகையில் ஊடகவியலாளர்களை கட்டாயப்படுத்தும் வகையில், முன்கூட்டியே திட்டமிட்ட நிகழ்வு போல தோன்றுகிறது. சமீப காலங்களில் ஊடகவியலாளர்கள்மீது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தாக்குதல்களை வைத்துப் பார்க்கும்போது, அவர்களுக்கான உரிமைகள் மற்றும் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையைக் காட்டுகிறது.” என பிசிஐ கூறியுள்ளது.

பொதுமக்களை குற்றவாளியாக்கும் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – மக்களவையில் மஹுவா மொய்த்ரா ஆவேசம்

புராரி சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ள பிசிஐ, “ஊடகவியலாளர்கள்மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஊடகவியலாளர்கள்மீதான தொடர் தாக்குதல் நிகழ்வுகள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் பாலியாவில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள பிசிஐ, “12 வகுப்பு ஆங்கில வினாத்தாள் கசிந்ததை அம்பலப்படுத்தியதற்காக, பாலியாவை தளமாக கொண்ட ஊடகவியலாளரை மாவட்ட நிர்வாகம் தன்னிச்சையாக கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது” என கூறியுள்ளது.

இலங்கையைப் போன்றே இந்தியாவும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் – சஞ்சய் ராவத் எச்சரிக்கை

ஊடகவியலாளரை உடனடியாக விடுதலை செய்வதோடு, வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பிசிஐ கோரியுள்ளது.

Source: The Hindu

பாஜக கொண்டு வந்த குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவால் மக்கள் அனைவரும் குற்றவாளியாக்கப்படுவார்களா?

மஹுவா மொய்த்ரா சொல்வது என்ன? கிளிக் செய்யவும்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்