டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் தரும் தேசிய தலைநகர் டெல்லி சட்டத்திருத்த மசோதாவுக்கு நேற்றைய தினம் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் வகுக்க காலம் நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு
நேற்று (மார்ச் 28) இந்த அறிவிப்பானது மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டதிருத்தத்தின் படி டெல்லியில் அரசு என்பது மாநில ஆளுநரையே குறிக்கும், டெல்லி முதலமைச்சர் எந்த முடிவை எடுக்க வேண்டுமானாலும் ஆளுநரின் ஒப்புதல் கோர வேண்டும்.
டெல்லி துணைநிலை ஆளுனருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா – நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
கடந்த வாரம் மார்ச் 22 அன்று மக்களவையிலும், மார்ச் 24 அன்று மாநிலங்களவையிலும் இந்தத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “இந்தியா ஜனநாயகத்தின் துன்பத்துக்குரிய நாள் “என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் இந்த மசோதா டெல்லியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தைப் பறிப்பதாக உள்ளது என்று கூறி ஆம் ஆத்மி கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Source: the hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.