Aran Sei

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தில் திணிக்கப்ப்டும் இந்தி – இந்தியை மட்டுமே பயன்படுத்த ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

ன்றிய அரசு நிறுவனமான இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் (ஐசிஏஐ) அக்டோபர் மாத இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில், ஐசிஏஐயின் மொழிக் கொள்கையை ஐசிஏஐயின் தலைவர் நிஹார் என்.ஜம்புசாரியா அறிவித்துள்ளார்.

இந்தி ஐசிஏஐயின் அதிகாரப்பூர்வ மொழி என்றும் ஆகவே, இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிப்பது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நேர்காணலில், “நம் பண்பாட்டையும் இந்தியின் பெருமையையும் போற்றும் விதமாக, தனியாக இந்தி தினம்(செப்டம்பர் 14) என்ற ஒன்று வேண்டாம். ஏனெனில், இந்தி மொழி நம் வாழ்க்கையின் ஒரு அங்கம். இந்தி மொழியை பேசுவதற்கு நாம் பெருமைக் கொள்ள வேண்டும். நம் தாய் மொழியான இந்தி மொழியின் பெருமையை பறைச்சாற்றும் விதமாக, ஐசிஏஐ இந்தி மொழியின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும்” என்று நிஹார் என்.ஜம்புசாரியா கூறியுள்ளார்.

இந்தியாவில் 31 விழுக்காடு மக்களுக்கு மட்டும்தான் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – ஒவைசி குற்றச்சாட்டு

பட்டயக் கணக்காளர்கள் அனைவரும் தங்கள் அன்றாட பணிகள் தொடர்பாக, இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம், அதன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், மாணவர்கள், அரசு கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் உரையாடுகையில் இந்தி மொழியை மட்டுமே பின்பற்ற ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று ஐசிஏஐயின் ஒன்றிய கவுன்சில் முடிவு செய்துள்ளது.

’மக்களுக்கு சிரமம் கொடுப்பதில் மோடி அரசு சாதனை படைத்துள்ளது’ – பிரியங்கா காந்தி

மேலும், ராஜபாஷா(ஆட்சிமொழி) என்பதால் இந்தியை மட்டுமே தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தவும், அதை ஊக்குவிக்கவும் உறுதிமொழி எடுக்குமாறு ஊழியர்களுக்கு ஐசிஏஐயின் ஒன்றிய கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

Source: Chartered Accountant Journal October 2021

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்