Aran Sei

கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட வாகன ஓட்டுநர் – டீசல் விலை உயர்வே காரணமென ஓட்டுநர்கள் போராட்டம்

ர்நாடக மாநிலம் கேம்பகௌடா பன்னாட்டு விமான நிலைய வாகன நிறுத்தத்தில் கடன் தொல்லை தாங்காமல் வாகன ஓட்டுநர் தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

787 ராணுவ வீரர்கள் தற்கொலை: மனஅழுத்தத்தை குறைக்க 23 மனவள மையங்கள் – மத்திய அரசு தகவல்

நேற்று, ரமணாகாரா மாவட்டத்தைச் சார்ந்த பிரதாப் என்ற வாகன ஓட்டுநர் தன் வாகனத்தின்மீது வாங்கிய கடன் சுமை தாங்காததால் கேம்பகௌடா பன்னாட்டு விமான நிலைய வாகன நிறுத்தத்திலேயே பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

கர்நாடக அரசின் சுற்றுலா துறையில் வாகனத்தை இணைத்துக் கொண்ட பிரதாப், கேம்பகௌடா பன்னாட்டு விமான நிலையத்தில் பணியில் ஈடுபட்டு வந்துக்கொண்டிருந்தார்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரை ‘பாரதமாதாவுக்கு ஜே’ என முழக்கமிட வைத்த விவகாரம்: காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

இந்தச் சம்பவம்குறித்து தெரிவித்த கர்நாடக ஊபர், ஓலா வாகன ஓட்டுனர்கள் சங்கத்தின் தலைவர் தன்வீர் பாஷா, “இது வருந்தத்தக்கது, பெட்ரோல் ,டீசல் விலை கணிசமான அளவில் உயர்ந்துள்ளதே எங்களைச் சார்ந்தவர் இவ்வாறு செய்வதற்கு காரணம். மேலும், கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தே நாங்கள் இன்னும் மீளவில்லை ” என்று தெரிவித்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

மேலும் “தனியார் இணைய நிறுவனத்தின் கீழ் வாகன ஓட்டுபவர்கள் குறைந்த விலைக்கு ஓட்டுவதால் மற்ற வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் வாகன ஓட்டிகளுக்குமே இதனால் பெருமளவில் பாதிப்படைந்திருக்கின்றனர் எனவே அரசு தலையிட்டுக் கட்டணத்தை முறைப்படுத்தப் பட வேண்டும்” என்று தன்வீர் பாஷா கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

பீகாரில் தீயிட்டு சிறுமி தற்கொலை முயற்சி – தொடர் பாலியல் சீண்டலுக்கு உள்ளான அவலம்

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கேம்பகௌடா பன்னாட்டு விமான நிலைய பகுதியில் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து வசதி பாதிக்கப்பட்ட பன்னாட்டு விமானநிலைய நிர்வாகம் அதுகுறித்து ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்