ஒரு சிக்கல் குறித்த புரிதலும் தொலைநோக்கு பார்வையும் இல்லாதிருப்பதை மறைக்க அச்சிக்கலையே முழுதாக புறக்கணிப்பதும் நிலைமை சீரடைந்தவுடன், பக்தாஸ் ஆர்மியுடன் வந்து வெற்றிக்கு உரிமைக் கொண்டாடுவதும், பிரதமர் மோடியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்று தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் பகடி செய்துள்ளார்.
இந்திய அரசியல் நடவடிக்கைக் குழு (ஐபேக்) என்ற பெயரில், தேர்தல் பரப்புரை குறித்த ஆலோசனைகள் தரும் நிறுவனத்தின் தலைவராக பிரஷாந்த் கிஷோர் உள்ளார். இந்நிறுவனம், 2011 ஆம் ஆண்டு, அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு பிரச்சார வேலைகளைச் செய்துக்கொடுத்தது.
அதைத்தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாஜகாவின் தேர்தல் பரப்புரைகளை முழுமையாக பொறுப்பெடுத்து நடத்திக்கொடுத்து. அக்கட்சி வெற்றி பெற குறிப்பிடத் தகுந்த அளவிற்கு உதவியது. பிரசாந்த கிஷோரின் நிறுவனம் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வேலை செய்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் பாஜக படுதோல்வியடையும் – பிரஷாந்த் கிஷோர் சவால்
இந்நிலையில், பிரஷாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் , “மோடி கோவிட் நெருக்கடியைக் கையாளுதல்: 1. ஒரு சிக்கல் குறித்த புரிதலும் தொலைநோக்கு பார்வையும் இல்லாதிருப்பதை மறைக்க அச்சிக்கலையே முழுதாக புறக்கணிப்பது. 2. திடீரென்று கட்டுப்பாட்டைக் கையில் எடுத்துக் கொள்ளுதல், ஆக்கப்பூர்வமற்ற வீராப்பு பேச்சுகளால் வெற்றி பெற்றதாக அறிவித்துக்கொள்ளுதல்.” என்று தெரிவித்துள்ளார்.
#ModiGovt handling of crisis:
#1: ignore problem to hide lack of understanding & foresightedness
#2: suddenly take control, use bluff & bluster to claim victory
#3: if problem persists, pass it on to others
#4: when situation improves, return with Bhakts’ army to take credit
— Prashant Kishor (@PrashantKishor) April 20, 2021
மேலும், “3. அச்சிக்கல் தீராது தொடர்ந்தால், அதை மற்றவர்கள் மேல் பழி போடுவது. 4. நிலைமை சீரடைந்தவுடன், பக்தாஸ் ஆர்மியுடன் வந்து வெற்றிக்கு உரிமைக் கோருவது.” என்று பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.